டம்பாச்சாரி விலாசம்
காசி விசுவநாத முதலியார் எழுதி 1872 இல் வெளியான தமிழ் நாடக நூல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டம்பாச்சாரி விலாசம் 1872-இல் எழுதப்பட்ட ஒரு தமிழ் நாடக நூல். விலாசம் என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த இந்நூலை இயற்றியவர் காசி விசுவநாத முதலியார்.
புராண கதைகளைத் தவிர்த்துச் சமகாலத்தவரது வாழ்க்கைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு நாடகமியற்றும் பாணி பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பரவலானது. அவ்வாறு விசுவநாத முதலியார் தன் காலத்தில் வாழ்ந்த ஒரு டம்பாச்சாரியின் கதையை அடிப்படையாகக் கொண்டு டம்பாச்சாரி விலாசத்தை எழுதினார். இசை நாடகமாகப் படைக்கப்பட்ட இந்நூலில் களம், அரங்கம் போன்ற மரபுகள் எதுவும் இல்லை; ஒரே மூச்சில் கதை சொல்லப்படுகிறது. கண்ணகியின் கதையை ஒத்த இதன் கதை கட்டியங்காரன் ஒருவன் கூறுவது போல அமைந்துள்ளது. பணக்காரன் ஒருவன் தாசி வீட்டுக்குச் சென்று தன் செல்வத்தை இழந்து பின் மனம் திருந்தி வாழ்வதே இதன் கதை.[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads