டயலொக்

From Wikipedia, the free encyclopedia

டயலொக்
Remove ads

டயலொக் அக்சியாடா (Dialog Axiata) இலங்கையில் 750க்கும் மேற்பட்ட கோபுரங்களைக் கொண்டுள்ள மிகவும் நெரிசலான வலையமைப்பாகும். ஆறு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள டயலொக் நிறுவனம் 2006 ஆம் ஆண்டில் 10 பில்லியன் இலங்கை ரூபாய்களை இலாபமீட்டிய ஒரு வர்த்தக நிறுவனமாகும். டயலாக் இலங்கையில் குழுக் குறுஞ்செய்திகளை இணையமூடாக வழங்குகின்றது. எனினும், இதனைப் பாவிப்பதற்கு அனைவரும் டயலொக் இணைப்பை வைத்திருத்தல் வேண்டும். இதன் முதன்மைப் போட்டியாளராக மோபிட்டல் விளங்குகின்றது. டயலொக் 2007 ஆம் ஆண்டு மாதாந்த வாடகையூடான செய்மதித் தொலைக்காட்சிச் சேவையினை தொடங்கியபோதும் இந்திய நிறுவனங்களின் இலவச சேவைக்கு ஈடுகொடுக்கமுடியாமல் வெற்றியடையவில்லை. செய்மதி இணைப்புக்களுக்கு தூரயா உடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...

டயலொக்கின் போட்டி நிறுவனங்களாக மொபிடல், எட்டிசலட், எயார்டெல் போன்ற நிறுவனங்கள் அமைந்துள்ளன. ஜூன், 2010 நிலவரப்படி டயலொக் நிறுவனத்திற்கு 6.6 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது[2]. இந்த தொகை இலங்கையின் மொத்த நகர்பேசி வாடிக்கையாளர்களில் 46% என்பதையும் குறிப்பிடவேண்டும்[3].

2007 ஆண்டு இந் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தமது சேவையினை முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் அட்டை (prepaid card) மூலம் பெற்றுக்கொள்வோரில் அரைப்பங்கினர் வடகிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள என தெரிவித்துள்ளது.

Remove ads

யுத்தம் முடிவுற்ற பின்னர்

முன்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்திற்கு 2009இல் டயலொக் நிறுவனம் தனது சேவைகளை வழங்கத் தொடங்கியது. இதன் படி கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற வன்னிப் பிரதேசங்களுக்கு முதலில் நகர்பேசி இணைப்புகளை வழங்கிய பெருமையை டயலொக் பெற்றுக்கொள்கின்றது[4].

வடக்கு கிழக்குப் பகுதிகளிறுக் விஸ்தரிப்பு முதலிய காரணங்களால் நீண்டகாலம் நஷ்டத்தில் இயங்கிய டயலொக் நிறுவனம் 2010ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் இலாபத்தைக் குறித்துள்ளது[5].

Remove ads

அகலப்பட்டை இணைப்புகள்

வைமாக்ஸ் இணைப்புகள்

அகன்ற அலை அல்லது அகலப்பட்டை (Broadband) இணைப்புக்களை டயலாக் டெலிகாம் வழங்கி வருகின்றது. இவை வைமாக்ஸ் (WiMax) தொழில்நுட்பத்தை உபயோகிக்கின்றன. சோதனை முயற்சியில் ஆரம்பத்தில் கொழும்பு, அம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் குருநாகலில் பொலநறுவை ஆகிய இடங்களில் ஆரம்பமான இச்சேவையை [6] அடுத்து நாடு ரீதீயாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா நகரப்பகுதிகளில் இச்சேவையானது கிடைக்கின்றது.

  • பதிவிறக்கம்: நொடிக்கு 1 மெகாபிட்ஸ் (மற்றும் நொடிக்கு 2, 4 மெகாபிட்ஸ்)
  • மேலேற்றம்: நொடிக்கு 256 கிலோபிட்ஸ் (மற்றும் நொட்டிக்கு 512 கிலோபிட்ஸ், 1 மெகாபைட்) வேக இணைப்புகள்.[7]

நகர் அகலப்பட்டை இணைப்பு

3ஜி தொழில்நுட்பம் மூலம் டயலொக் நிறுவனம் நகர் அகலப்பட்டை இணைப்பை வழங்கிவருகின்றது[8]. ஆரம்பத்தில் 7.2 Mbps வேகம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டாலும் இணைப்பைப் பெறும் இடத்தைப் பொறுத்து இந்த இணைய வேகம் மாறுபடக்கூடியது. ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட வேகம் கிடைக்கவில்லை என்று பல பயனர்கள் முறையிட்டதை அடுத்து டயலொக் நிறுவனம் தனது நகர் அலப்பட்டை இணைப்பு வேகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக அறிவித்தது[9].

வை-பை

டயலொக் நிறுவனம் தெரிவு செய்யபட்ட சில இடங்களில் வை-பை அகலப்பட்டை சேவையை வழங்குகின்றது. விமான நிலையம், பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் இந்த சேவையை வழங்குகின்றது [10]. வாடிக்கையாளர்கள் தமது கடன் அட்டை அல்லது முட்கொடுப்பனவு அட்டை மூலம் பணத்தை செலுத்தி இந்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் [11].

Remove ads

நான்காந் தலைமுறைத் தொழினுட்பம்

டயலொக் நிறுவனம் நான்காந் தலைமுறை இணையத் தொழினுட்பத்தை தென்னாசியாவில் முதன்முறையாக இலங்கையில் பரீட்சித்து,[12] தற்போது கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் சில பாகங்களில் மட்டும் பொதுமக்கள் பாவனைக்கு விட்டுள்ளது.[13]

செய்மதித் தொலைக்காட்சி

கொழும்பில் தமிழர் ஒருவர் நடத்தி வந்த சீபிஎன் சாட் (CBN SAT) செய்மதித் தொலைக்காட்சி சேவையை தமிழர் என்பதைக் காரணம் காட்டி பாதுகாப்பு அமைச்சினால் ஒளிபரப்பும் உரிமை மறுக்கப்பட்டது[சான்று தேவை]. பின்னர் இலங்கை உயர் நீதிமன்றத் தீர்புக்கு அமைவாக அடிமட்ட விலைக்கு டயலாக் நிறுவனத்திடம் விற்பனை செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டதற்கு அமைய இத்தொலைக்காட்சி சேவையானது டயலாக் டெலிகாமினால் பலாத்காரமாக வாங்கப்பட்டு ஒளிபரப்பினை மேற்கொண்டு வருகின்றது[சான்று தேவை].

Remove ads

சீடிஎம்ஏ தொலைபேசி

நாட்டின் பலபகுதிகளில் ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்திற்கு மேலாக சீடிஎம்ஏ தொழில் நுட்பத்தில் தொலைபேசி இணைப்புக்களை வழங்கி வருகின்றது.

சமுகவலையமைப்பு ஆதரவு

பேஸ்புக், டிவிட்டர், கூகிள் கலண்டர் போன்ற சமூகவலைப்பின்னல் சேவைகளை டயலொக் ஆதரிக்கின்றது. நிகழ் நிலையில் சமூக வலைப்பின்னல் நிகழ்வுகளை குறுஞ்செய்தி அறிவிப்பு மூலம் டயலொக் வலையமைப்பில் பெற்றுக்கொள்ளலாம்[14][15][16].

ibuy.lk

இலங்கையில் இணைய வழி பொருட்களை விற்பனைசெய்யும் இந்த தளத்தை டயலொக் நிறுவனம் நடாத்தி வருகின்றது. பூக்கள் மூதல் கணனி உதிரிப்பாகங்கள் வரை இந்த வலைமலையில் விற்பனை செய்யப்படுகின்றது. தளம் டயலொக் நிறுவனத்தினால் நிர்வாகிக்கப்பட்டாலும் மூன்றாம் நபர்கள் அல்லது நிறுவனங்கள் தமது பொருட்களையும் இங்கே விற்பனை செய்யலாம்[17]. டயலொக் நிறுவனமானது இந்த தளம் மூலம் இலங்கையருக்கு உலகத்தரத்திலான இணைய வணிக அனுபவத்தை வழங்க விழைவதாக அறிவித்துள்ளது.

Remove ads

உசாத்துணைகள்

வெளியிணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads