டாக்டர். ஹரி சிங் கவுர் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாக்டர் அரி சிங் கவுர் பல்கலைக்கழகம் என்பது (ஆங்கிலம்: Dr Harisingh Gour Vishwavidyalaya; இந்தி: डॉ. हरिसिंह गौर विश्वविद्यालय) டாக்டர் அரி சிங் கவுர் விஷ்வவித்யாலயா என்றும் சாகர் பல்கலைக்கழகம் என்றும் அழைக்கப்படுகிறது. இப்பல்கலைக்கழகம் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள சாகர் நகரில் அமையப்பெற்றுள்ளது. ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். 1946-ஆம் ஆண்டு சூலை மாதம் 18ஆம் தேதி பிரித்தானிய ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட போது இப்பல்கலைக்கழகம் சாகர் பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. பின்னர்,1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இப்பல்கலைக்கழகத்துக்கு, இதனை நிறுவிய சர் அரி சிங் கவுரின் பெயரை மாநில அரசு சூட்டியது.[3] இப்பல்கலைக்கழகம் மத்தியப் பிரதேசத்தின் பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும்.[4]
Remove ads
பெருமை
மத்தியப் பிரதேசத்தின் பழமையான பல்கலைக்கழகமாக இது இருந்ததால், மாநிலத்தின் பெரும்பாலான கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தி இணைவுக் கல்லூரிகளாக இருந்தன. ஜபல்பூர் கல்லூரி, இந்தியாவின் பழமையான அறிவியல் கல்லூரியாகும். மத்திய இந்தியாவின் பழமையான பொறியியல் கல்லூரியான ஜபல்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியும் இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியாக இருந்தது.
வளாகம்

டாக்டர் அரி சிங் கவுர் பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம் பதாரியா மலைகளில் உள்ள சாகர் நகரில் அமைந்துள்ளது. இது 850 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. மேலும் பல்கலைக்கழகத்தில் பல இணைப்புக் கல்லூரிகள் மற்றும் தொலைதூரக் கல்விப் பிரிவுகளும் உள்ளன. மாணவர்களுக்கு மருத்துவ அறிவியலில் பயிற்சி அளிக்க ஒரு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது.
மாணவ மாணவிகலுக்குத் தனித்தனி விடுதிகள், அரங்கம், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகம், விளையாட்டு மைதானங்கள் மற்றும் திறந்தவெளி அரங்கம் என மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அடிப்படை வசதிகளைக் கொண்டுள்ளது.
Remove ads
துறைகள்
பல்கலைக்கழகம் இளங்கலை, முதுநிலை, முனைவர் பட்டம், பட்டயம் மற்றும் சான்றிதழ் போன்ற அனைத்து நிலைகளிலும் படிப்புகளை வழங்குகிறது. இது தொலைதூரக் கல்வித் திட்டங்களையும் வழங்குகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் பின்வரும் துறைகள் உள்ளன:
- வயது வந்தோர் மற்றும் தொடர் கல்வி
- பண்டைய இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல்
- மானுடவியல்
- பயன்பாட்டு புவியியல்
- பயன்பாட்டு நுண்ணுயிரியல்
- உயிரி தொழில்நுட்பவியல்
- தாவரவியல்
- வணிக மேலாண்மை
- மத்திய கருவி மையம்
- வேதியியல்
- வர்த்தகம்
- தொடர்பு & பத்திரிகை
- கணினி அறிவியல் & பயன்பாடு
- குற்றவியல் & தடயவியல் அறிவியல்
- பேரிடர் மேலாண்மை
- சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்
- பொருளாதாரம்
- கல்வி
- ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள்
- நுண்கலைகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள்
- பொது மற்றும் பயன்பாட்டு புவியியல்
- இந்தி
- வரலாறு
- தொழில்துறை மற்றும் மருந்து வேதியியல்
- தொலைதூரக் கல்வி நிறுவனம்
- சட்டம்
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
- மொழியியல்
- பொருள் அறிவியல்
- கணிதம் & புள்ளியியல்
- இசை
- மருந்தியல்
- தத்துவம்
- உடற்கல்வி
- இயற்பியல்
- அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகம்
- உளவியல்
- சமசுகிருதம்
- சமூகவியல் மற்றும் சமூக பணி
- யோக அறிவியல்
- விலங்கியல்
மேனாள் மாணவர்கள்
- ரஜ்னீஷ் - ஆன்மீக குரு
- கோவிந்த் நாம்தேவ் - நாடக மற்றும் பாலிவுட் நடிகர்
- யனமலா ராம கிருஷ்ணுடு - ஆந்திர சட்டசபையின் முன்னாள் சபாநாயகர்[3]
- அசுதோஷ் ராணா - பாலிவுட் நடிகர்
- முகேஷ் திவாரி - பாலிவுட் நடிகர்
- உதய் பிரகாஷ் - கதாசிரியர்
- வீரேந்திர குமார் காதிக்
- பக்கன் சிங் குலாஸ்தே
- கோபால் பார்கவா
- பூபேந்திர சிங் (மத்திய பிரதேச அரசியல்வாதி)
- இலட்சுமி நாராயண் யாதவ்
- ஹர்ஷ் யாதவ்
- டி. டி. பாவால்கர்
- முனி க்ஷமசாகர் – ஜைன துறவி[5][6]
- மகேந்திர மேவதி (நடிகர்)
- கே. எஸ். சுதர்சன் - ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்-மேனாள் தலைவர்
- இராம்குமார் வர்மா - கவிஞர் மற்றும் எழுத்தாளர்
- தினேஷ் பாலிவால் - இந்தியத் தேசிய காங்கிரசு தலைவர்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads