டாக்டர் சி. வி. இராமன் பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

டாக்டர் சி. வி. இராமன் பல்கலைக்கழகம் (Dr. C.V. Raman University, Bihar), பீகார் என்பது ஓர் தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது இந்தியாவின் பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் பகவான்பூரில் அமைந்துள்ளது. பீகார் தனியார் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2013இன் கீழ் அகில இந்திய மின்னணு மற்றும் கணினி தொழில்நுட்ப சமூகத்தின் சார்பில் இந்த பல்கலைக்கழகம் 2018இல் நிறுவப்பட்டது.[3] பீகாரில் நிறுவப்பட்ட ஆறு தனியார் பல்கலைக்கழகங்களில் இது நான்காவதாகும். முதல் இரண்டு தனியார் பல்கலைக்கழகமான கே.கே பல்கலைக்கழகம் மற்றும் சந்தீப் பல்கலைக்கழகம், சிஜோல் தொடர்ந்து பாட்னாவின் அமிட்டி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.[4] இந்த பல்கலைக்கழகத்தைப் பீகார் அமைச்சரவை 10 ஜனவரி 2018 அன்று அங்கீகரித்தது,[5] 7 பிப்ரவரி 2018 அன்று அரசு செய்திக்குறிப்பில் அறிவித்தது.[6] ஜூலை 2018 கல்வியாண்டில் இப்பல்கலைக்கழகம் செயல்படத்துவங்கியது.[7] இப்பல்கலைக்கழகம் ஐந்து பிரிவுகளில் பல்வேறு பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குகிறது. இதற்கு நாட்டின் முதல் நோபல் பரிசு பெற்ற ச. வெ. இராமனின் பெயரிடப்பட்டது.[5]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...
Remove ads

பாடத் துறைகள்

இந்த நிறுவனம் பட்டயம், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை ஐந்து பாடப் பிரிவுகள் மூலம் வழங்குகிறது:[8]

  • வணிக மற்றும் மேலாண்மை
  • கலை மற்றும் மானுடவியல்
  • அறிவியல்
  • கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்
  • வேளாண்மை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads