டிங்கோ நாய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆஸ்திரேலியாவில் உள்ள பழக்கப்படுத்தபடாத காட்டு நாய் டிங்கோ என்னும் நாய். இந்தச் சொல் ஈயோரா மக்கள் மொழியில் இருந்து பெறப்பட்டது. இந்நாயின் அறிவியல் பெயர் கேனிஸ் லூபஸ் டிங்கோ (Canis lupus dingo) என்பதாகும்.
இந்த டிங்கோ நாய்கள் பார்ப்பதற்கு பெரும்பாலும் தமிழ் நாட்டுக் கோம்பை நாய்கள் போல தோற்றம் அளித்தாலும் இவை நாய்க்கும், ஓநாய்க்கும் இடைப்பட்ட ஓர் உருவம் கொண்டவை. பெரும்பாலும் பழுப்பு, சாம்பல் நிறத்தில் இருப்பன. இதன் எடை 10 முதல் 24 கிகி இருக்கும்; உயரம் ஏறத்தாழ 44 செ.மீ முதல் 63 செ.மீ வரை இருக்கும்; உடல் நீளம் 86 முதல் 122 செ.மீ இருக்கும். பெரும்பாலும், இவை குரைப்பதில்லை (குலைப்பதில்லை). மரத்திலும் ஏறவல்லவை. ஆண்டிற்கு ஒருமுறைதான் இனப்பெருக்கம் செய்கின்றன.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads