டி. கே. சிதம்பரநாத முதலியார்

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர் (1882–1954) From Wikipedia, the free encyclopedia

டி. கே. சிதம்பரநாத முதலியார்
Remove ads

டி. கே. சிதம்பரநாத முதலியார் (T. K. Chidambaranatha Mudaliar, 11 செப்டம்பர் 1882 - 16 பிப்ரவரி 1954) ரசிகமணி டி.கே.சி. என அறியப்படும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர், தமிழ் இலக்கிய திறனாய்வு முன்னோடி ஆவார்[1].[2][3]

விரைவான உண்மைகள் டி. கே. சிதம்பரநாதர், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கை

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை தீத்தாரப்ப முதலியார் - மீனாம்பாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்த சிதம்பரநாத முதலியார் தென்காசியில் ஆரம்ப கல்வியும் திருச்சிராப்பள்ளி உயர்நிலைப் பள்ளியில் உயர் கல்வியும் பயின்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். இவருடைய தாய் மற்றும் இவருடைய மனைவி பிச்சம்மாளின் பிறந்த ஊரான திருவில்லிபுத்தூர் வடக்கு இரத வீதியில் உள்ள இல்லத்தில் சிறிது காலமும், குற்றாலத்திலும் வாழ்ந்து இருந்தார்.[4] 1930 முதல் 1935 வரை சென்னை மாகாண இந்து அறநிலையத்துறை பாதுகாப்பு ஆணையராகப் பணியாற்றினார்.

Remove ads

இலக்கியப் பணி

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டை சாலைத்தெருவில் உள்ள இவரது வீட்டின் நடு முற்றமாக இருந்த (தொட்டிக்கட்டு) வட்ட வடிவமான அமைப்பில் இவருடைய நண்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள். இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. இவரின் வட்டத்தொட்டி இலக்கிய அமைப்பில் மீ. ப. சோமு, பி. ஸ்ரீநிவாச்சாரி, கல்கி, ரா. பி. சேதுப்பிள்ளை, இராசகோபாலாச்சாரி, அ. சீனிவாச ராகவன், தொ. மு. பாஸ்கர தொண்டைமான், ச. வையாபுரிப்பிள்ளை, வெ. ப. சுப்பிரமணிய முதலியார் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர்.

Remove ads

அரசியல்

1927 ல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாநில முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு அரசிற்கு ஏற்ற முத்திரைச் சின்னமாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் பரிந்துரை செய்தார்[5].

குடும்பம்

இவருடைய மகனான தீபன் என்கிற தெ. சி. தீர்த்தாரப்பன் சென்னை வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அனைத்திந்திய வானொலியின், வானொலி இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். அரும்பிய முல்லை என்ற நூலை எழுதியவர்.[6]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads