டி. பி. கஜேந்திரன்
தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தூ. பெ. கஜேந்திரன் (T. P. Gajendran, 1955 – 5 பெப்ரவரி 2023) ஓர் இந்தியத் திரைப்பட நடிகரும், இயக்குநரும் ஆவார்.[2] தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.[3] விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார். இவர் 15இற்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 100 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாளின் மகனாவார்.[4] நடிகை டி. பி. முத்துலட்சுமி அவரது மைத்துனி, கஜேந்திரனின் வளர்ச்சிக்கு உதவினார்.[5]
Remove ads
தொழில் வாழ்க்கை
டி.பி.கஜேந்திரன் கே. பாலசந்தர், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். சிதம்பர ரகசியம் (1985) திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். 1988 இல், வீடு மனைவி மக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் 2000 இற்கு முற்பகுதியில் குறைந்த செலவில் குடும்ப நகைச்சுவை நாடகத் திரைப்படங்களை இயக்கினார். இது போன்ற குடும்பத் திரைப்படங்களில் பிரபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.[6][7] இதில் பட்ஜெட் பத்மநாபன் (2000), மிடில் கிளாஸ் மாதவன் (2001), மற்றும் பந்தா பரமசிவம் (2003) ஆகியவை அடங்கும். இவர் இயக்கிய நான்காவது படமான ஆசை வச்சேன் உன் மேலே திரைப்படத்திற்குப் பிறகு திரைப்படங்களை இயக்கவில்லை.[8] 2001 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படங்களின் போக்கு காரணமாக இவர் கற்பூர நாயகி என்ற இந்து பக்தித் திரைப்படத்தை உருவாக்க முயன்றார். ரோஜா மற்றும் பானுப்ரியா நடிக்கவிருந்த இத்திரைப்படம் கைவிடப்பட்டது.[9]
2015 இல், இவர் திரைப்படத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் (CTA) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
Remove ads
இறப்பு
கஜேந்திரன் 2023 பெப்ரவரி 5 அன்று தனது 68 வயதில் உடல் நலக் குறைவால் காலமானார்.[11]
திரைப்பட விபரம்
இயக்கிய திரைப்படங்கள்
நடித்த திரைப்படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்
- இதயம் - சன் தொலைக்காட்சி - 2009 முதல் 2012 வரை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads