தோரணை (திரைப்படம்)

2009 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சண்டைத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

தோரணை (Thoranai) என்பது 2009 ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த சண்டை மற்றும் நகைச்சுவை தமிழ் திரைப்படம் ஆகும். ஜி.கே. பிலிம் கார்பரேஷன் சார்பில் விக்ரம் கிருஷ்ணா தயாரிக்க, சபா அய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இதில் விஷால், ஷ்ரேயா சரண் ஆகிய இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் சந்தானம், பொல்லாதவன் கிஷோர், அலி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தமிழில் தோரணை என்ற பெயரிலும், தெலுங்கில் பிஸ்தா என்ற பெயரிலும் படமாக்கப்பட்டது. பின்னர், 2010 ல் விஷால் கி குர்பான் என்ற பெயரில் இந்தியில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் தோரணை, இயக்கம் ...
Remove ads

கதைச் சுருக்கம்

குரு (கிஷோர்) மற்றும் தமிழரசன் , சூர்ய பிரகாஷ் (பிரகாஷ் ராஜ்) ஆகியோர் மற்றவர்களை பயமுறுத்தி அடாவடித்தனத்தில் ஈடுபடும் அடிதடி கும்பலைக் கொண்டு சென்னையில் இருக்கின்றனர். அவர்கள் நகரில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டும் சண்டையிட்டும் வருகிறார்கள். மதுரையைச் சேர்ந்த முருகன் (விஷால்) ஒரு லட்சியத்தோடு சென்னை வருகிறான். இருபது வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு ஓடிப்போன தனது சகோதரனை தேடிக் கண்டு பிடித்து ஊர்த் திரும்புவதாக தனது தாயிடம் (கீதா) வாக்களித்துவிட்டு வருகிறான்.

அவனது நண்பன் வெள்ளைச்சாமியின் (சந்தானம்) உதவி அவனுக்குக் கிடைக்கிறது. பின் குரு தான் தனது சகோதரன் எனத் தெரிகிறது. அவர்கள் இருவரும் எவ்வாறு சூர்யபிரகாசிடம் இருந்து தங்களைப் பாதுகாத்தனர் என்பது போன்று கதை அமைக்கப்பட்டிருக்கும்.

Remove ads

நடிப்பு

தமிழ் பதிப்பு

ஒலிப்பதிவு

மேலதிகத் தகவல்கள் எண்., பாடல் ...

வரவேற்பு

பிகைன்ட்வுட் மற்றும் சிஃபி போன்ற வலைதளங்களில் இப்படம் பல்வேறு விமர்சனங்களை எதிர் கொண்டது.[1][2][3]

சான்றுகள்

வெளிப்புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads