டெக்கேன்
பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெயின் ஒரு பகுதிப்பொருள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டெக்கேன் (Decane ) என்பது C10H22 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஓர் ஆல்க்கேன் ஐதரோகார்பன் ஆகும். இதற்கு 75 கட்டமைப்புச் சமபகுதியங்கள் அல்லது மாற்றியன்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.[3] இந்தச் சமபகுதியங்கள் யாவும் எரிதகு நீர்மங்களாகும். டெக்கேன், பெட்ரோலியத்தின் ஒரு பகுதிப்பொருளாக உள்ளது. மற்ற ஆல்க்கேன்களைப் போலவே இதுவும் மின்முனைவற்றதாக, நீர் போன்ற முனைவுறு திரவங்களில் கரையாமல் இருக்கிறது. இதனுடைய பரப்பிழுவிசை மதிப்பு 0.0238 நி.மீ−1 ஆகும்.[4]
Remove ads
வினைகள்
மற்ற ஆல்க்கேன்களைப் போல டெக்கேனும் எரிதல் வினைகளுக்கு உட்படுகிறது. அதிக அளவு ஆக்சிசன் முன்னிலையில் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.
எரிதலுக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிசன் கிடைக்காவிட்டாலும் டெக்கேன் எரிதலுக்கு உட்பட்டு தண்ணீர் மற்றும் கார்பன் ஓராக்சைடாக மாறுகிறது.
- 2C10H22 + 21O2 → 20CO + 22H2O
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads