டேனிஷ் சித்திக்கி
இந்திய ஒளிப்பட பத்திரிக்கையாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டேனிஷ் சித்திக்கி (Danish Siddiqui, 19 மே 1983 - 15 சூலை 2021 [1] ) என்பவர் மும்பையைச் சேர்ந்த ஒரு இந்திய ஒளிப்பட பத்திரிகையாளர் ஆவார். இவர் தேசிய ராய்ட்டர்ஸ் மல்டிமீடியா அணியின் தலைவராக இருந்தார்.[3][4][5][6] ரோகிங்கியா அகதிகளின் நெருக்கடியை ஆவணப்படுத்தியதற்காக, ராய்ட்டர்ஸ் குழுவின் ஒரு பகுதியாக, தோற்ற ஒளிப்படத்திற்கான 2018 புலிட்சர் பரிசைப் பெற்றார்.
2021 ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபான் படைகளுக்கும் இடையிலான மோதலில் பாகிஸ்தானுடனான எல்லை அருகே மறைத்து இருந்தபோது இவர் சுடுக் கொல்லப்பட்டார்.[7][8][9]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
சித்திகி தெற்கு புது தில்லியில் உள்ள அக்னெல் பள்ளியில் பயின்றார். தில்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 2007 ஆம் ஆண்டில் ஜாமியாவில் உள்ள ஏ. ஜே. கே மக்கள் செய்தித் தொடர்பியல் ஆய்வு மையத்தில் மக்கள் செய்தித் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10][11]
தொழில்
டிவி டுடே நெட்வொர்க்கிற்கு மாறுவதற்கு முன்பு இந்துஸ்தான் டைம்சின் நிருபராக சித்திகி தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1] பின்னர் இவர் ஒளிப்படச் செய்தியாளராக மாறினார். மேலும் 2010 இல் ராய்ட்டர்சில் சேர்ந்தார். அதன் பின்னர் மொசூல் போர் (2016–2017), ஏப்ரல் 2015 நேபாள நிலநடுக்கம், 2015 ரோகிங்கியா அகதிகள் நெருக்கடி, 2019-2020 ஹாங்காங் போராட்டங்கள், 2020 தில்லி கலவரம், கோவிட் -19 பெருந்தொற்று ஆகியவற்றை சித்திகி ஒளிப்படங்களாக எடுத்தார்.[6][12][13]
2021 சூலை முதல், தலிபான் தாக்குதலை ஆவணப்படுத்த ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகளுடன் ஒரு உட்பொதிக்கப்பட்ட பத்திரிகையாளராக பணியாற்றி வந்தார். இவருடைய கடைசி பணியாக இது ஆனது.[1]
இந்தியா முழுவதும் பரவிய கோவிட்-19 பெருந்தொற்றால் ஆயிரக்கனக்கானவர்கள் இறந்தனர். நோயால் இறந்தவர்களின் பிணங்கள் பெருமளவில் தகனம் செயப்படுவதை காட்டும் சித்திக்கின் ஒளிப்படங்கள் குறித்து சில இந்தியர்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.[14]
2020 தில்லி கலவரத்தின்போது ஒரு இசுலாமியரை ஒரு இந்து கும்பல் தாக்கி கொன்றதை இவரது ஒளிப்படம் ஆவணப்படுத்துகிறது. இந்த ஆண்டின் வரையறுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒன்றாக ராய்ட்டர்ஸ் இடம்பெற்றது.[15][16] பிபிசி நியூஸ், நேஷனல் பப்ளிக் ரேடியோ மற்றும் <i id="mwVg">தி கேரவன்</i> ஆகியவை கலவரத்தின் வரையறுக்கும் படம் என்று குறிப்பிட்டன.[17][18] மற்றொரு புகைப்படம், குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2019 ஐ எதிர்த்து போராடுபவர்களை காவல் துறையினர் முன்னிலையிலே துப்பாக்கி கொண்டு அச்சுறுத்தும் இடதுசாரி இளைஞரின் செயலை இவர் படம்பிடித்தார். இது "இந்து தேசியவாதிகளின் தீவிர செயலுக்கு" சான்று ஆனது.[19]
Remove ads
விருதுகள்
2018 ஆம் ஆண்டில், ரோகிங்கியா அகதிகளின் நெருக்கடியை ஆவணப்படுத்தியதற்காக தோற்ற ஒளிப்படத்திற்கான 2018 புலிட்சர் பரிசை (ராய்ட்டர்ஸின் ஒளிப்பட ஊழியர்களின் ஒரு பகுதியாக) வென்ற முதல் இந்தியரானார்.[20] இவரது வேறு சில விருதுகளும் அடுத்து குறிப்பிடப்பட்டுள்ளன.
- முதல் இடம், தோற்ற வகை, அட்லாண்டா ஒளிப்பட பத்திரிக்கையாளர் விருதுகள் 2017 [21]
- 3 வது இடம், தோற்ற வகை, அட்லாண்டா ஒளிப்பட பத்திரிக்கையாளர் விருதுகள் 2014 [22]
- 3 வது இடம், கலை மற்றும் கலாச்சார வகை, சோனி உலக ஒளிப்பட விருதுகள் 2013 [23]
- மாண்புமிகு குறிப்பு, விளையாட்டு ஒற்றையர் பிரிவு, இந்திய மீடியா அறக்கட்டளை (MFI) 2013
- தங்க விருது, பொருளாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப செய்திகள், ஒற்றையர், சீனா சர்வதேச பத்திரிகை ஒளிப்படப் போட்டி 2012
இவர் இறந்த ஏழு நாட்களுக்குப் பிறகு, 2021 சூலை 22 அன்று, இலக்னோவை தளமாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பான ஆகாஸ் அறக்கட்டளை, இவரது நினைவாக ஒரு உதவித்தொகை திட்டத்தைத் தொடங்கியது. இதன்படி புகழ்பெற்ற இந்திய பல்கலைக்கழகத்தில் இருந்து பத்திரிகை பணியில் ஈடுபடும் இளங்கலை மாணவருக்கு ₹ 50,000 வழங்கப்படும்.[24]
தனிப்பட்ட வாழ்க்கை
சித்திகி ஒரு முஸ்லீம். இவர் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ரைக் என்பவரை மணந்தார்.[1][25] அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1]
இறப்பு
2021 ஜூலை 15 அன்று காந்தகாரில் உள்ள ஸ்பின் புல்டக்கில் ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகளுக்கும் தாலிபான் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை படம்பிடிக்கச் சென்ற போது மூத்த ஆப்கானிய அதிகாரியுடன் சித்திகியும் கொல்லப்பட்டார் [19][26] இவரது உடல் ஆப்கான் செம்பிறை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.[27]
ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் சித்திகி தலிபான்களால் நிகழ்த்தப்பட்ட ஒரு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார் என்று கூறினார்.[28] [a] தலிபான்கள் இக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருத்தம் தெரிவித்தனர்.
எதிர்வினைகள்
இந்தியா: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் நிகழ்வில் தலிபான் நடவடிக்கைகளை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கண்டித்தார். தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்கா: அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதை "மிகப்பெரிய இழப்பு" என்று கூறினார்.
ஆப்கானித்தான்: ஜனாதிபதி அசரஃப் கனி அகமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதோடு, ஊடகவியலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதை மீண்டும் வலியுறுத்தி தனது இரங்கலையும் தெரிவித்தார்.
Remove ads
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads