இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள்

From Wikipedia, the free encyclopedia

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள்
Remove ads

இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள், என்பவை 2019 அசாமில் தொடங்கி டெல்லி, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவிய ஒரு போராட்டமாகும். இப்போராட்டங்கள், பொதுவாக இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை எதிர்த்தும், சில இடங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்தும் நடைபெற்றன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், டிசம்பர் 4, 2019 அன்று அசாமில் போராட்டங்கள் தொடங்கியது. பின்னர், வடகிழக்கு இந்தியா முழுவதிலும், மெதுவாக இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் எதிர்ப்புகள் வெடித்தன. டிசம்பர் 15 அன்று, போராட்டம் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் வளாகத்திற்குள் போலீசார் பலவந்தமாக நுழைந்தனர். போலீசார் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர் மற்றும் சுமார் நூறு மாணவர்கள் ஒரே இரவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். போலீசாரின் மிருகத்தனம் பரவலாக விமர்சிக்கப்பட்டது, இதன் விளைவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, போராட்டங்களின் விளைவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதுகள் நடைபெற்றுள்ளன. மேலும் ஆறு பேர் இறந்தனர். அசாமில் போலீசாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக கொல்லப்பட்டதாகக் கூறப்படுபவர்களில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

விரைவான உண்மைகள் Citizenship Amendment Act protests, தேதி ...
Remove ads

விளக்கம்

2004 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, (அசாம் மாநிலம் தவிர) இந்தியாவில் வாழும் தாயோ, தந்தையோ இந்தியராக இருந்து அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்களாகவே கருதப்படுவார்கள். அசாம் மாநிலத்தை பொருத்தவரை இந்த காலக்கெடு 1971 ஆம் ஆண்டாக குறிப்பிடப்பட்டுள்ளது என இந்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.[27]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads