டேவிட் பேக்கர் (உயிர் வேதியியலாளர்)

From Wikipedia, the free encyclopedia

டேவிட் பேக்கர் (உயிர் வேதியியலாளர்)
Remove ads

டேவிட் பேக்கர் (David Baker) (பிறப்பு: அக்டோபர் 6,1962, சியாட்டில், வாஷிங்டன்) ஓர் அமெரிக்க உயிர்வேதியியலாளரும் கணக்கீட்டு உயிரியலாளரும் ஆவார். இவர் புரதங்களை வடிவமைத்து அவற்றின் முப்பரிமாண கட்டமைப்புகளைக் கணிப்பதற்கான முறைகளின் முன்னோடியாக உள்ளார்.[3] இவர் உயிர் வேதியியலில் என்றிட்டா மற்றும் ஆப்ரி டேவிஸ் நல்கை பேராசிரியராகவும், ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆய்வாளராகவும், வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் மரபணு அறிவியல், உயிர் பொறியியல், வேதியியல் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் இயற்பியல் ஆகியவற்றின் இணை பேராசிரியராகவும் உள்ளார். ரொசெட்டாஃபோல்டைப் பயன்படுத்தி புரத வடிவமைப்பிற்காக அவருக்கு 2024 ஆம் ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5]

விரைவான உண்மைகள் டேவிட் பேக்கர், பிறப்பு ...

பேக்கர் மற்றும் பிறரால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் இப்போது புரத அமைப்பு முன்கணிப்பு சிக்கலைப் பெரும்பாலும் தீர்த்துள்ளன.[6][7] பேக்கர் அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் புரத வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ளார்.[8] இவர் பன்னிரெண்டிற்கும் மேலான உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை இணைந்து நிறுவியுள்ளார், மேலும், டைம் பத்திரிகையின் 2024 ஆம் ஆண்டில் ஆரோக்கியத்தில் மிகவும் செல்வாக்கு செலுத்தும் 100 பேரின் தொடக்கப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.[9]

Remove ads

வாழ்க்கை

பேக்கர் அக்டோபர் 6,1962 அன்று வாஷிங்டனின் சியாட்டிலில் பிறந்தார். 1984ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். 1989ஆம் ஆண்டில் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ராண்டி சேக்மேனின் ஆய்வகத்தில் உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். இங்கு இவர் முதன்மையாக புரதப் போக்குவரத்து மற்றும் ஈஸ்ட் கடத்தல் குறித்து பணியாற்றினார். 1993ஆம் ஆண்டில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் டேவிட் அகர்டுடன் உயிர்இயற்பியலில் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வினை முடித்தார்.

பேக்கர் 1993ஆம் ஆண்டில் வாசிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி உயிர்வேதியியல் துறையில் பேராசிரியராகச் சேர்ந்தார். இவர் 2000ஆம் ஆண்டில் ஹோவர்ட் ஹியூஸ் மருத்துவ நிறுவனத்தில் ஆய்வாளராக ஆனார்.[10] பேக்கர் 2009ஆம் ஆண்டில் அமெரிக்கன் கலை அறிவியல் அகாதமியில் தகுதிபெறு ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[11] இவர் யு. டபிள்யூ. வில் மற்றொரு உயிர்வேதியியலாளரான ஹன்னெலே ரூஹோலாவினை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Remove ads

ஆராய்ச்சி

புரதங்களின் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை கணிப்பதற்கும் வடிவமைப்பதற்கும் கணக்கீட்டு முறைகளின் வளர்ச்சியானது முதன்மையாக அறியப்பட்டாலும், பேக்கர் ஒரு செயலுறு சோதனை உயிர்வேதியியல் குழுவாகப் பணியாற்றினார்.[3] இவர் 600க்கும் மேற்பட்ட அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பேக்கரின் குழு அப் இனிசியோ (ab initio) புரதக் கட்டமைப்பு முன்கணிப்புக்கான ரோசெட்டா வழிமுறையை உருவாக்கியது. இது புரத வடிவமைப்பிற்கான ஒரு கருவியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது Rosetta@Home, மற்றும் கணினி விளையாட்டு போல்டிட் என்று அழைக்கப்படும் விரவலாக்கப்பட்ட கணினி செயல்முறைத் திட்டமாகும்.[3][12][13][14][15] [16]உயிரியல் மூலக்கூறு கட்டமைப்பு முன்கணிப்பு மற்றும் வடிவமைப்பு மென்பொருளை உருவாக்கும் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூட்டமைப்பான ரோசெட்டா காமன்சின் இயக்குநராகப் பேக்கர் பணியாற்றினார். ரோசெட்டா நெறிமுறையின் கைமுறையான உதவி மற்றும் தானியங்கி மாறுபாடுகள் உட்பட அப் இனிசியோ முறைகளில் நிபுணத்துவம் பெற்ற பேக்கரின் குழு தொடர்ந்து சிஏஎஸ்பி கட்டமைப்பு முன்கணிப்பு போட்டியில் பங்கேற்றுள்ளது.[17][18]

பேக்கரின் குழு புரத வடிவமைப்புத் துறையிலும் தீவிரமாக உள்ளது. இக்குழுவினர் ஒரு புதிய மடிப்பைக் கொண்ட முதல் செயற்கைப் புரதமான டாப் 7-ஐ வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்கவர்கள்.[3][19]

2017ஆம் ஆண்டில், பேக்கரின் புரத மாதிரி நிறுவனம் ஓபன் பரோபகாரத்திலிருந்து 11 மில்லியன் டாலருக்கும் அதிகமாகப் பெற்றது. இதைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் கூடுதலாக 3 மில்லியன் டாலர் நன்கொடையைப் பெற்றது.[20][21][22]

2001ஆம் ஆண்டில் எலி லில்லி துணை நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ப்ராஸ்பெக்ட் ஜீனோமிக்சு, 2023ஆம் ஆண்டில் அசுட்ராஜெனிகாவால் கையகப்படுத்திய ஐகோசாவாக்சு, சனா பயோடெக்னாலஜி, லைல் இம்யூனோதெரபியூடிக்சு மற்றும் சைரா தெரபியூடிக்சு உள்ளிட்ட பல உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களை பேக்கர் இணைந்து நிறுவினார்.[23][24]

Remove ads

விருதுகள்

புரத மடிப்பு குறித்த பணிக்காக, பேக்கர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இதில் ஓவர்டன் பரிசு (2002) உயிர்இயற்பியலுக்கான சாக்லர் பன்னாட்டுப் பரிசு (2008) வில்லி பரிசு (2022) மற்றும் பிபிவிஏ அறக்கட்டளை அறிவு எல்லைகள் விருது (2022) முக்கியமானவை[25][26][27][28]

புரத வடிவமைப்பு குறித்த பணிக்காக, பேக்கர் நியூகோம்ப் கிளீவ்லேண்ட் பரிசைப் (2004) பெற்றுள்ளார்.[29] நானோ தொழில்நுட்பத்தில் பேய்ன்மேன் பரிசு (2004) மற்றும் உயிரி அறிவியலில் திருப்புமுனை பரிசும் (2021) பேக்கர் பெற்றுள்ளார்.[30] [31]

2024ஆம் ஆண்டில், பேக்கருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[4][5]

தோற்றங்கள்

ஏப்ரல் 2019 இல், கனடாவின் வான்கூவரில் TED2019 இல் பேக்கர் "புதிய புரதங்களை வடிவமைப்பதன் மூலம் நாம் தீர்க்கக்கூடிய 5 சவால்கள்" என்ற தலைப்பில் ஒரு TED பேச்சை வழங்கினார்.[32]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads