டையமண்ட் துறைமுகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டையமண்ட் துறைமுக நகரம் (Diamond Harbour), இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள நகராட்சியுடன் கூடிய துறைமுக நகரம் ஆகும். இந்நகரம் ஊக்லி ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது டையமண்ட் துறைமுக வருவாய் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். இது கொல்கத்தா மாநகரத்திற்கு தெற்கே 51.6 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாவட்டத் தலைமையிடமான அலிப்பூர் நகரத்திற்கு தெற்கே 42.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
Remove ads
பொருளாதாரம்
கொல்கத்தா துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும்/இறக்கப்படும் சரக்குகள், டையமண்ட் துறைமுகத்திலிருந்து இயக்கப்படும் சரக்குப் படகுகள் மூலம் சரக்குப் போக்குவரத்து நடைபெறுகிறது.[3]
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலை எண் 12 டையமண்ட் துறைமுகம் வழியாகச் செல்கிறது.[4]கொல்கத்தாவின் புறநகர் பகுதியான சியால்டாவுடன், டையமண்ட துறைமுக நகரம் கொல்கத்தா புறநகர் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு டையமண்ட துறைமுக தொடருந்து நிலையம் உள்ளது.[5]
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளும், வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 41,802 ஆகும். அதில் ஆண்கள் 21050 மற்றும் பெண்கள் 20752 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 986 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3688 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.93%, ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5221 மற்றும் 38 ஆகவுள்ளனர்.[6] இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 85.98%, இசுலாமியர் 13.75% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[7]
தட்ப வெப்பம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads