தங்காக்

மலேசியாவில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia

தங்காக்
Remove ads

தங்காக் (மலாய்:Tangkak), (சீனம்:东甲), மலேசியாவின், ஜொகூர் மாநிலத்தில், லேடாங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ஜொகூர் மாநிலத் தலைநகரமான ஜொகூர் பாருவில் இருந்து 180 கி.மீ. வடக்கே உள்ளது. நெகிரி செம்பிலான், பகாங் ஆகியவை இதன் எல்லை மாநிலங்கள். மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது. தங்காக் நகருக்கு மிக அருகில் உள்ள நகரம் ஜாசின் ஆகும்.

விரைவான உண்மைகள் தங்காக்Tangkak, நகரம் ...

தங்காக் நகரம், நெசவு ஆடை வகைகளுக்குப் புகழ்பெற்றது. இந்த நகருக்கு ’துணிமணிகளின் சொர்க்கம்’ எனும் அடைமொழிப் பெயரும் உள்ளது.[1]

Remove ads

பொது

இந்த நகரத்தின் சுற்றுப்புற பகுதிகள் விவசாயத் துறையைச் சார்ந்தவை ஆகும். ரப்பர், எண்ணெய்ப் பனை, கொக்கோ பயிர் செய்யப் படுகிறது. டுரியான் எனும் முள்நாறிப் பழத்திற்கு இந்த நகரம் பெயர் போனது. கோலாலம்பூர், ஜொகூர் பாரு, சிங்கப்பூர் ஆகிய மூன்று மாநகரங்களுக்கும் மையத்தில் தங்காக் நகரம் அமைந்து இருக்கிறது.

மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற குனோங் லேடாங், இந்தத் தங்காக் நகரில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது. தமிழில் லேடாங் மலை என்று அழைக்கிறார்கள். இந்த மலை வரலாற்றுப் புகழ் பெற்றது. லேடாங் மலையை தங்காக் நகரில் இருந்து தெளிவாகப் பார்க்க முடியும்.[2]

Remove ads

வரலாறு

18-ஆம் நூற்றாண்டில், மலாக்காவில், தங்காக் நகருக்குச் சற்றுத் தொலைவில் ‘சோகோங்’ எனும் ஒரு குடியிருப்புப் பகுதி இருந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் வேறு ஓர் இடத்திற்குப் புலம் பெயர்ந்தனர். கீசாங் ஆற்றின் வழியாக புதிய இடத்திற்கு வந்தனர். அந்த இடம் அடர்ந்த காடுகளாகவும், சதுப்பு நிலமாகவும் இருந்தது. அதற்கு தங்காக் என்று பெயர் வைத்தனர்.[3]

தங்காக் புதிய குடியேற்றப் பகுதிக்கு குடியேறிய மக்கள், தங்களின் பழைய இடமான ‘சோகோங்’ குடியிருப்புப் பகுதிக்கும் அடிக்கடி வந்து சென்றனர். அந்தச் சமயத்தில் ‘சோகோங்’ குடியிருப்பில் இருந்தவர்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் மலாய் மொழியில் ’தாங் மெராங்காக்’ (மலாய்:tang merangkak) என்று பதில் கூறினர். அந்தத் ’தாங் மெராங்காக்’ எனும் சொற்களில் இருந்து உருவானதுதான் தங்காக் எனும் பெயர்.[4]

Remove ads

கட்டமைப்பு

தங்காக் நகருக்கு விரிவான சாலைத் தொடர்புகள் உள்ளன. மலேசியாவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, இந்த நகருக்கு மிக அருகாமையில் தான் செல்கிறது. இங்கு இருக்கும் தங்காக் மாவட்ட மருத்துவமனை, மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரியின் கற்பித்தல் மருத்துவமனையாக விளங்கி வருகின்றது. இங்குள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம், இந்தியர்களின் வழிபாட்டுத் தளமாக இருக்கிறது.

முன்பு தங்காக், மூவார் ஆகிய இரண்டு துணை மாவட்டங்களும் ஒன்றாக ஒரே மாவட்டமாக இருந்தன. 2006-ஆம் ஆண்டில் தனித்தனியான மாவட்டங்களாகப் பிரிக்கப் பட்டன.

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads