தசாவதாரக் கோயில்

உத்தரப் பிரதேசத்தின் லலித்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia

தசாவதாரக் கோயில்map
Remove ads

விஷ்ணு கோயில் அல்லது தசாவதாரக் கோயில் (Vishnu Temple) என்பது குப்தர்கள் காலத்திய கோயிலாகும். இக்கோயில் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தியோகர் எனும் ஊரில் உள்ளது.

விரைவான உண்மைகள் தசாவதாரக் கோயில், அமைவிடம் ...
Remove ads

விபரங்கள்

இக்கோயில் ஏறத்தாழ கி பி 500-ஆம் ஆண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகும்.[2] பண்டைய இந்து சமயக் கோயில்களில் இன்றளவும் உள்ள மணற்கல்லால் கட்டப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயில் வளாகத்தில் விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் அழகிய சிற்பங்களும் மற்றும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் உள்ளது.[3] இக்கோயில் குப்தர்களின் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலையை ஆராய உதவும் ஆதாரங்கள் அதிகம் கொண்டதாகும்.[4] இக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும்.

இக்கோயில் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.[2] இக்கோயிலில் இந்து சமய கடவுளர்களின் சிற்பங்களும், சின்னங்களும் உள்ளது.[5] இக்கோயில் மணற்கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டதாகும்.[5]

இந்த தசாவதாரக் கோயில் குப்தர்களின் அழகிய இந்துக் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றாக விளங்குகிறது.[2] கி பி ஐந்தாம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது.[6][7][8][9]

Remove ads

வரலாறு

Thumb Thumb
இடது: ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட திருமால்.வலது: ஆதிசேஷன் மீது அமர்ந்த நிலையில் விஷ்ணு

திருமாலுக்கு அர்பணிக்கப்பட்ட குப்தர்களின் இக்கோயிலை, ஆங்கிலேயரான கேப்டன் சார்லஸ் ஸ்டிராகன் என்பவர் முதலில் கண்டுபிடித்தார். இது வட இந்தியாவின் முதல் பஞ்சயாதனக் கோயில் ஆகும்.[10][11]அலெக்சாண்டர் கன்னிங்காம் என்ற பிரித்தானியர் இக்கோயிலுக்கு தசவதாரக் கோயில் எனப் பெயரிட்டார்.

கோயில் கட்டிட அமைப்பு

இக்கோயில் பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். தசாவதாரக் கோயில், வட இந்தியாவில் விமானத்துடன் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். இக்கோவிலின் அடித்தளத்தளத்தில் தாழ்வாரமும், உயரமான பீடத்துடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் பாழடைந்த நிலையில் இருந்தபோதும் "நிர்ப்பந்திக்கும் முன்னிலையில்" உள்ளது. மேற்கு திசை நோக்கிய இக்கோயிலின் முக்கிய கருவறையின் மூலவர் மீது சூரிய ஒளி விழும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது.

சிற்பங்கள்

Thumb
நர-நாராயாணர்களின் சிற்பம்
Thumb Thumb
இடது:பள்ளி கொண்ட பெருமாளின் காலைப் பிடித்துவிடும் இலக்குமியின் சிற்பம். வலது: கஜேந்திர மோட்சக் காட்சி

தசாவதாரக் கோயில் சுவர்களில் புனித ஆறுகளின் தெய்வங்களான யமுனை மற்றும் கங்கை, நர-நாராயணன், கஜேந்திர மோட்சம், ஆதிசேஷனை படுக்கையாக கொண்ட திருமால் [12][13], ஆதிசேஷனை இருக்கையாக கொண்ட பெருமாள் சிற்பங்கள் உள்ளது.[14][15][16][17] கோயில் சுவரின் கீழ் வரிசையில் திரௌபதியுடன் பாண்டவர்கள் நின்றிருக்கும் சிற்பங்கள் உள்ளது.

கோயிலின் பக்கச் சுவர்களிலும், பின்பக்கச் சுவர்களிலும் விஷ்ணுவின் தசவதாரக் காட்சிகளை வெளிப்படுத்தும் நரசிம்மர் மற்றும் வராகம், சிற்பங்கள் உள்ளது.[18]

தேவகி தான் சிறையில் பெற்றேடுத்த கிருஷ்ணரை வசுதேவரிடம் கொடுக்கும் காட்சியை சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் தற்போது புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது.[19]

Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads