உதயகிரி குகைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதயகிரி குகைகள் (Udayagiri Caves) பண்டைய இந்து சமய சிற்பக்கலையை விளக்கும் குடைவரைக் கோயில் ஆகும்.[1][2] உதயகிரி குகைகள் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலுக்கு வடகிழக்கே உள்ள விதிஷா நகரத்திலிருந்து 48 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.[2] உதயகிரி குகைகள் பௌத்தத் தலமான சாஞ்சியிலிருந்து 13 கி மீ தொலைவில் உள்ளது.[3] குப்தர்கள் காலத்திய புகழ்பெற்ற உதயகிரி குகைகள் தற்போது இந்தியத் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
உதயகிரி குடவரைக் கோயில்கள் குப்தப் பேரரசின் காலத்தில் கி பி ஐந்தாம் நூற்றாண்டில் உதயகிரி மலையில் குடைந்தெடுத்து நிறுவப்பட்டது. உதயகிரி குகைகளின் குடைவரை சிற்பங்களில் விஷ்ணுவின் வராக அவதாரச் சிற்பம் மிகவும் சிறப்பானது.[1] உதயகிரி குகை கல்வெட்டுக் குறிப்புகளில் குப்தப் பேரரசர்களான இரண்டாம் சந்திரகுப்தர் (கி பி 375-415) மற்றும் முதலாம் குமாரகுப்தன் (கி பி 415-55) ஆகியவர்களின் ஆட்சிக் காலத்தை விளக்குகிறது.[4] உதயகிரி மலையில் இந்து சமயம் மற்றும் சமண சமயம் தொடர்பான 20 குகைகள் உள்ளது.[2] குகை எண் 20-இல் மட்டும் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களைக் கொண்டுள்ளது.[5]





Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads