தஞ்சாவூர் மணிகுன்றப்பெருமாள் கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு வைணவக் கோயில் From Wikipedia, the free encyclopedia

தஞ்சாவூர் மணிகுன்றப்பெருமாள் கோயில்
Remove ads

தஞ்சாவூர் மணிகுன்றப்பெருமாள் கோயில் தஞ்சாவூரில் அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.

விரைவான உண்மைகள் மணிகுன்றப்பெருமாள் கோயில், பெயர் ...
Thumb
நுழைவாயில்
Remove ads

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். [1] [2]

அமைவிடம்

தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது.

அமைப்பு

Thumb
மூலவர் சன்னதி

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் வலப்புறம் கருடாழ்வாரும், இடப்புறம் ஆஞ்சநேயரும் உள்ளனர். அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் மணிகுன்றப்பெருமாள் உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் விருத்தசேனம், உடையார், நம்மாழ்வார் ஆகியோர் உள்ளனர்.மூலவர் சன்னதிக்கு வலப்புறம் வெளியில் அம்புஜவல்லித்தாயார் சன்னதி உள்ளது.

நவநீத சேவை

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிககுன்றப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேல ராஜ வீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழ ராஜ வீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமப் பெருமாள், மானம்புச்சாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய 15 கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்துகொள்கின்றனர். [3] அந்த கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

Remove ads

குடமுழுக்கு

16.3.2000இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads