தஞ்சாவூர் வான்படைத் தளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தஞ்சாவூர் வான்படைத் தளம் ( Thanjavur Air Force Station[2]) (ஐஏடிஏ: TJV, ஐசிஏஓ: VOTJ) இந்திய மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி நகரான தஞ்சாவூரில் அமைந்துள்ள ஓர் படைத்துறை வானூர்தி நிலையமாகும்[1]. 2006ஆம் ஆண்டில் இந்திய வான்படையால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் இந்த நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கையகப்படுத்தப்பட்டுள்ள நிலம் முன்னதாகவே ஒரு வானூர்தி நிலையமாக செயல்பட்டதால் ஓடுபாதைகளும் பிற கட்டமைப்புகளும் ஏற்கனவே உள்ளன.[2] 2012 முதல் இது முதன்மையான வான்படைத் தளமாக இயங்கத் துவங்கும்.[3].
1990களில் தஞ்சாவூர் சென்னையுடன் வாயுதூத் சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தது; போதுமான ஆதரவில்லாமையால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன.
Remove ads
வசதிகள்
கடல் மட்டத்திலிருந்து 253 அடி உயரத்தில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. இங்கு இரண்டு ஓடுதளங்கள் காங்கிறீட்டினால் அமைக்கப்பட்டிருக்கின்றன: 5,680 by 150 அடிகள் (1,731 m × 46 m) நீளமுள்ள 07/25 மற்றும் 4,757 by 150 அடிகள் (1,450 m × 46 m) நீளமுள்ள 14/32.[1] அண்மையில் வான்வழியே எடுக்கப்பட்ட படிமங்கள் ஓடுதளம் 07/25 மட்டுமே குறிக்கப்பட்டிருப்பதாகக் காட்டுகின்றன.[4]
தென்னிந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் போர் விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம் தமிழகத்தில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானப்படைத்தளத்தை திங்களன்று தஞ்சாவூரில் நடை பெற்ற விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந் தோணி திறந்து வைத்து, நாட் டிற்கு அர்ப்பணித்தார்.இந்திய விமானப்படையின் முதன்மைப் படைவரிசையில் இடம்பெற்றுள்ள சுகோய் ரக போர் விமானங்கள் இடம் பெற்றுள்ள ஒரே விமானப் படைத்தளமாக இந்தப் புதிய தளம் இருக்கும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. “தஞ்சாவூர் விமானப் படைத் தளமானது இந்திய விமானப்படையின் மற்று மொரு மிக முக்கிய கேந்திர மான தளமாக இருக்கும். இந்த தளத்தில் நமது விமானப்படை யின் முதன்மை வரிசையில் இடம்பெற்றுள்ள சுகோய் ரக போர் விமானங்களை நிலை நிறுத்துவதன் மூலம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நாட் டின் பாதுகாப்பு நலன்களை காக்கும் பணியில் இந்திய விமானப்படை இன்னும் சீரிய முறையில் செயல்பட முடியும்” என்று, தளத்தை திறந்து வைத்த பின்னர் அமைச்சர் ஏ.கே.அந் தோணி கூறினார்.
இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்திய தீபகற்ப பிரதேசத்தின் புவி அரசியல் முக்கியத்துவம் அதி கரித்துவரும் பின்னணியில் தஞ்சாவூர் விமானப்படைத் தளம் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது என்றும் அவர் கூறினார். கடற்கொள்ளை, பயங்கர வாதம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த பிரச்சனைகள் நமது நாட்டின் கடல் எல்லையைச் சுற்றிலும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருகின்றன எனக் குறிப்பிட்ட ஏ.கே.அந்தோணி, இந்தியா அமைதியை விரும் பும் ஒரு நாடு என்ற போதிலும், தேசிய பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் நிலையில் அதை எந்த நேரமும் எதிர்கொள்ள தயா ராக இருக்க வேண்டியது அவ சியம் என்றும் கூறினார். எதிர்காலத்தில் இன்னும் மேம்படுத்தப்படவுள்ள தஞ்சா வூர் விமானப்படைத் தளம், இந்தப்பிரதேசத்தில் அமைந் துள்ள அனைத்து கேந்திர முக் கியத்துவம் வாய்ந்த கட்ட மைப்புகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் எனத் தெரிவித்த அந்தோணி, இங்கு சுகோய் ரக போர் விமானங்களை நிலை நிறுத்துவதன் மூலம் பாதுகாப் பை மேலும் உறுதிப்படுத்தி யிருக்கிறோம் என்றும் தெரி வித்தார். தஞ்சாவூர் விமானப்ப டைத் தளம் துவக்கப்பட்டதன் அடையாளமாக சுகோய் 30 ரகத்தைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்கள், படைத் தளத்தில் சாகசங்களை நிகழ்த்தின.
இந்திய விமானப்படையின் தெற்கு கமாண்டின் கட்டுப் பாட்டில் வரும் இந்த தளம் ஓரிரு ஆண்டுகளில் மேலும் மேம்படுத்தப்பட்டு, 2017-18ம் ஆண்டுவாக்கில் 16 முதல் 18 ஜெட் போர் விமானங்களை கொண்ட ஒரு முழுமையான படைத்தளமாக உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவித் தனர்.இந்திய விமானப்படையின் வசம் மொத்தம் 170 சுகோய் - 30 ரக போர் விமானங்கள் உள் ளன. இவை அனைத்தும் ரஷ் யாவிடமிருந்து வாங்கப்பட்ட வையாகும். ஏற்கனவே புனே, பரேலி ஆகிய விமானப்படைத் தளங் களில் தலா இரண்டு சுகோய் ரக போர் விமானங்கள் நிறுத் தப்பட்டுள்ளன. தேஜ்பூர், சகுவா, ஹல்வாரா மற்றும் ஜோத்பூர் ஆகிய விமானப் படைத் தளங்களில் தலா ஒரு சுகோய் ரக போர்விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
Remove ads
வான்வழிச் சேவைகளும் சேரிடங்களும்
தஞ்சாவூர் - சென்னை, பெங்களூரு சேவைக்கு உடான் திட்டத்தின் கீழ் இயக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் புரட்டாசி, 2020 சேவை ஆரம்பம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தல்
தஞ்சை விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. 2020 செப்டம்பர் முதல் தஞ்சையில் இருந்து சென்னை, பெங்களூருக்கு விமானங்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டு காலங்களில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக தஞ்சை வளர்ந்து தற்போது மாநகராட்சியாகவும் ஆகிவிட்டது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் சாப்ட்வேர் துறையில் பணியாற்றி வருகிறார்கள். பலர் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தஞ்சை விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தஞ்சை-புதுக்கோட்டை ரோட்டில் உள்ள விமானப்படை தளத்தின் அருகே விமான நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஏர் டிராபிக் பணிகள் முடிவடைந்து விமான முனைய பணிகள் தொடங்கி உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன், அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்தில் தஞ்சை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கோள்கள்
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads