தடாகம் பள்ளத்தாக்கு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தடாகம் பள்ளத்தாக்கு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் உள்ளது. இது கோயம்புத்தூர் நகரத்திற்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் கவுசிகா நதி மற்றும் சங்கனூர் ஓடை போன்ற 50க்கும் மேற்பட்ட நீரோடைகள் பாய்கிறது. எனவே தடாகம் பள்ளத்தாக்கை காப்புக் காடாக அறிவிக்க வேண்டும் என தடாகம் பள்ளத்தாக்குப் பகுதி வேளாண் மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.[1]
மலைவாழ் பழங்குடியினர் அதிகம் வாழும் தடாகம் பள்ளத்தாக்கில் சின்னத்தடாகம், நஞ்சுண்டபுரம், பன்னிமடை, சோமயாம்பாளையம் மற்றும் வீரபாண்டி எனும் 5 மலை கிராம ஊராட்சிகள் உள்ளது.
தடாகம் பள்ளத்தாக்கு நீர் வளமும், நில வளமும் கொண்டது. இப்பள்ளத்தாக்கில் செம்மண் போன்ற கனிம வளங்கள் நிறைந்தது. நீர் வளமும், காடு வளமும், நில வளமும் கொண்ட தடாகம் பள்ளத்தாக்கில் அனுமதியின்றியும், விதிமுறைகளுக்கு முரணாக 197 செங்கல் சூளைகள் செயல்படுகிறது. செங்கல் சூளை நடத்துவோர்களால் இப்பள்ளத்தாக்கின் கனிம வளக்கொள்ளை, காடழிப்பு, அரசு நிலம் மற்றும் புறம்போக்கு ஆக்கிரமிப்பு, நீர் ஆதாரங்கள் மறிப்பு, குழந்தை தொழிலாளர், கொத்தடிமை முறை போன்ற விதிமீறல்களில் ஈடுபடுபட்டனர். மேலும் கவுசிகா நதி மற்றும் சங்கனூர் நீரோடைகள் இப்பள்ளத்தாக்கின் செங்கல் சூளைகளால் மாசடைந்து போனது. தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியை சுற்றுச் சூழல் மாசிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.[2] [3][4][5]
2022-ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும், நீதிமன்ற உத்தரவாலும் தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வந்த அனைத்து செங்கல் சூளைகள் மூடப்பட்டது. ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் துடியலூர் உள்ளது. ஏப்ரல் 2018 முதல் இப்பகுதியில் சட்டம் & ஒழுங்கை கண்காணிக்க காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. [6]
Remove ads
அர்ச வித்தியா குருகுலம்
வேதாந்தக் கல்வி பயில்வதற்கான அர்ச வித்தியா குருகுலத்தை, தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்த ஆனைகட்டியில் சுவாமி தயானந்த சரசுவதி நிறுவியுள்ளார்.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads