தண்டராம்பட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தண்டராம்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில், தண்டராம்பட்டு வட்டத்தின் வருவாய் கிராமமும்[1], தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியும்[2] ஆகும். தண்டராம்பட்டு நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
Remove ads
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி தண்டராம்பட்டில் 7,096 பேர் வாழ்கிறார்கள்.[3]
சிறப்பு
நீண்டகாலக் கோரிக்கையான தனித் தாலுக்க கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, எழுந்த தண்டராம்பட்டு புது வட்டத்திற்கு, இதுவே தலைமையகம் ஆகும்.
சாத்தனூர் அணை
சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சென்னகேசவ மலைகளுக்கு இடையில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். தமிழகத்திலுள்ள குறிப்பிடத்தக்க அணைகளுள் இதுவும் ஒன்று. இது திருவண்ணாமலை நகரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த அணை 1958-இல் காமராஜர் அவர்களால் கட்டப்பட்டது. இங்கு அழகிய பூங்காவும, ஆசியா கண்டத்தில் மிகப்பெரிய முதலைப்பண்ணை ஒன்றும் உள்ளது. இதன் கொள்ளளவு 7321 மில்லியன் கன அடிகள். முழு அளவு 119 அடி உயரம். திருவண்ணாமலை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், பாசன வசதியையும் அளிக்கிறது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads