வீணை தனம்மாள்
இந்திய இசைக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீணை தனம்மாள் (Veenai Dhanammal) என அறியப்பட்ட தனம்மாள் (1868- 15 அக்டோபர் 1938)[1]; ஒரு சிறந்த வீணைக் கலைஞராவார். இவர் பாட்டிலும் நடனத்திலும் சிறந்து விளங்கியவர். இவர் சரஸ்வதி வீணைக் கலைஞராகவும் இருந்தார்.[1] இவரது பெயரில் உள்ள "வீணை" என்ற முன்னொட்டு அந்த கருவியில் இவரது விதிவிலக்கான தேர்ச்சியின் குறிகாட்டியாகும்.

Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி
சென்னையின் ஜார்ஜ் டவுன் பகுதியில் தொழில்முறை இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் குடும்பத்தில் தனம்மாள் பிறந்தார். இவரது பாட்டி காமாட்சி ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர் ஆவார். இவரது தாயார் கர்நாடக இசையில் மும்மூர்த்திகளான சியாமா சாஸ்திரிகளின் மகன் சுப்பராய சாத்திரியிடம் பயிற்சி பெற்ற ஒரு பாடகர் ஆவார்.
தனது குடும்ப உறுப்பினர்களின் பயிற்சிக்கு கூடுதலாக, தனம்மாள் வாலாசாபேட்டை பாலகிருஷ்ண தாஸ் (சேத்ரையாவின் பதங்களின் களஞ்சியமாக இருந்த பார்வையற்ற இசைக்கலைஞர்) மற்றும் சாத்தனூர் பஞ்சநாத ஐயர் ஆகியோரிடமிருந்தும் கற்றுக்கொண்டார்.
Remove ads
இசைப் பயிற்சி
முதலில் அம்மாவிடமும், தனது பாட்டியிடமும் வீணையைக் கற்ற இவர், பின்னர் அழகச்சிங்கரையாதன், தம்பியப்ப பிள்ளை தீட்சிதர், முத்தையால்பேட்டை தியாகய்யர் ஆகியோரிடமும் இசை கற்றார். வீணை தனம்மாளின் மகள் டி. ஜெயம்மாள் ஒரு கருநாடக இசைப் பாடகி ஆவார்.
இந்துஸ்தானி இசையில் கிரானா கரானாவின் (பாடும் பாணி) நிறுவனரான அப்துல் கரீம் கான் இவரிடமிருந்து கருநாடக பாடல்களைக் கற்றுக் கொண்டு அவற்றை மேடையில் வெளிபடுத்தினார்.
மாணாக்கர்கள்
- டி. பிருந்தா
- டி. முக்தா
- காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை (கருநாடக இசைப் பாடகர்)
கௌரவம்
இவரது நினைவாக இந்திய அஞ்சல் துறை ஒரு அஞ்சல் தலையை 03-டிசம்பர் 2010 அன்று வெளியிட்டது.[2]
மேற்கோள்கள்
நூல்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads