வாலாசாபேட்டை

பெருநகர வேலூர் மாநகர பகுதி From Wikipedia, the free encyclopedia

வாலாசாபேட்டைmap
Remove ads

வாலாசாபேட்டை அல்லது வாலாஜாபேட்டை (ஆங்கிலம்: Walajapet) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு 28 நவம்பர் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். வாலாஜா வட்டம் மற்றும் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். வாலாஜாபேட்டை நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

வாலாஜாப்பேட்டையிலிருந்து சென்னை 107 கி.மீ.; வேலூர் 30 கி.மீ.; அரக்கோணம் 50 கி.மீ.; காஞ்சிபுரம் 40 கி.மீ., வேலூர் 90 கி.மீ. மற்றும் ஆரணி 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.9254°N 79.3641°E / 12.9254; 79.3641 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 184.7 மீட்டர்கள் (606 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,289 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 47,498 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4940 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,027 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.2%, இசுலாமியர்கள் 12.26%, கிறித்தவர்கள் 1.21% , தமிழ்ச் சமணர்கள் 011%, பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[4]

புகழ் பெற்றவர்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads