தனியாமங்கலம்
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
தனியாமங்கலம் (ஆங்கிலம்: Thaniyamangalam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.
இது பிரதான கிராமம் மட்டுமின்றி, மேலும், பாரதி நகர், முத்துராமலிங்கம்பட்டி, தேத்தாம்பட்டி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது, மக்களின் பிரதான தொழில் விவசாயமாக இருப்பினும் கடந்த காலங்களில் பெரும்பான்மையான இளைய சமுதாயத்தினர் இங்கிருந்து சென்று மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பணிபுரியத் தொடங்கியுள்ளனர், தமிழக அரசியலில் ஈடு இணையற்ற தலைவர்களுள் ஒருவரான தியாகி.கன.கக்கன் அய்யா அவர்கள் இந்த கிராமத்தில்தான் பள்ளி ஆசிரியராய்ப் பணியாற்றி பின்னாளில் தீவிர அரசியலில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,748 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[1] இவர்களில் 1,757 ஆண்கள், 1,991 பெண்கள் ஆவார்கள். தனியாமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.81% ஆகும்.தனியாமங்கலம் மக்கள் தொகையில் 15.93% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஊர் தெய்வங்கள்
- அருள்மிகு ஐயனார் கோவில்
- அருள்மிகு மங்கல சுந்தரி அம்மன் கோவில்
- அருள்மிகு அடைக்கலம் காத்த அம்மன் கோவில்
- அருள்மிகு புழுங்காவெட்டி கோவில்
- அருள்மிகு தோக்கிலி முத்தையா கோவில்
தனியாமங்கலம் நீர்நிலைகளும் நீர்பிடிப்பு பகுதிகளும்
கிராமத்தின் நீர்நிலைகள் பெயர்கள் மற்றும் பரப்பளவு தமிழ்நாடு அரசு கிராம" அ " பதிவேட்டின் படி, சில பெயர்கள் திரும்ப திரும்ப வரலாம் ஆனால் வெவ்வேறு புல எண்கள் கொண்டவை.
- புது ஊருணி- 2 ஏக்கர் 10 சென்ட
- கிளாம்பள்ளம்-2 ஏக்கர் 33 சென்ட்
- கருப்பணன் குளம்-1 ஏக்கர் 80 சென்ட்
- பேடா குளம்-15 ஏக்கர் 90 சென்ட்
- புதுக்குளம்-86 சென்ட்
- ஈச்சன்குண்டான்-3 ஏக்கர் 53 சென்ட்
- சேங்கை ஊருணி -1 ஏக்கர் 50 சென்ட்
- கருப்பண கண்மாய்-9 ஏக்கர் 16 சென்ட்
- பொட்டழகன் கண்மாய்-19 ஏக்கர் 50 சென்ட்
- சின்னப்பயல் ஊருணி-70 சென்ட்
- புதுக்குளம் கண்மாய்-3 ஏக்கர் 69 சென்ட்
- இலக்கன் கருப்பண ஊருணி-77 சென்ட்
- தப்பட்டான் குளம் -8 ஏக்கர் 90 சென்ட்
- ஆனைக்குட்டி குளம் -10 ஏக்கர் 34 சென்ட்
- தனியாமங்கலம் குளம்-8ஏக்கர் 23 சென்ட்
- பாப்பான் குளம்-60 சென்ட்
- பெரும் கரையான் குளம்-3 ஏக்கர் 44 சென்ட்
- மோகினி குளம் -13 ஏக்கர் 47 சென்ட்
- தென்பள்ளம் ஊருணி-2 ஏக்கர் 35 சென்ட்
- கட்டழகன் குளம்-11 ஏக்கர் 28 சென்ட்
- மழைப்பிரியான் ஊருணி -2 ஏக்கர் 11 சென்ட்
- கொட்டக்குடியான் ஊருணி -70 சென்ட்
- அய்யனன் குளம்-6 ஏக்கர் 35 சென்ட்
- கூளப்பாண்டி குளம்-96 சென்ட்
- அம்பட்டன் கண்மாய்-பரப்பளவு தெரியவில்லை
- வீரணன் கண்மாய்-பரப்பளவு தெரியவில்லை
- ஏந்த கண்மாய்-பரப்பளவு தெரியவில்லை.
- கணக்கோட்டு கண்மாய்-பரப்பளவு தெரியவில்லை
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads