தமிழகத்தில் புதிய கற்காலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழகத்தில் புதிய கற்காலம்[1] என்பது கி.மு. 3000[2][3] - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆர்க்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் (தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது) இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.[4]

பையம்பள்ளி
பையம்பள்ளியில் காணப்படும் புதிய கற்காலச் சமுதாயம் இரு விதத்தில் காணப்படுகின்றது.[4]
முதற்பிரிவு
இக்கால மக்கள் வெளுப்பு மிக்க சாம்பல் நிற மட்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பல வகைக் கற்களால் ஆன கற்கருவிகள், கற்கோடாரிகள், தானியங்களை அரைக்க, இடிக்க உதவும் கற்கருவிகள் ஆகியனவும் கிடைத்துள்ளன.
மேலும் இக்கால மக்கள் வாழ்ந்த பல்வேறு அளவுள்ள குழி வீடுகளில் குச்சி நடுகுழிகள் காணப்படுவதால் இவர்கள் கூரைகள் அமைந்த குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.
இரண்டாம் பிரிவு
இதே புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாம் பிரிவு மக்கள் சாம்பல் மற்றும் சிவப்பு நிற மட்கலன்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் இங்கு கிடைத்தனவற்றுள் சிறந்தனவாம்.
- உணவு உற்பத்தி[1]
கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர்.
Remove ads
பரவல்
மேலும் இக்காலக் கருவிகள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்,
- வட ஆற்காடு பகுதிகள் - அப்புக்கல்லு, கல்லேரிமலை, சவ்வாது மலை, திருமலை, அம்பூர், சந்திராபுரம், கீழ்விளம்புச்சி, கொளுதம் பத்து, குத்ததூர், மலையம்பத்து, நெல்லிவாசல் நாடு, பழையதலூர், புதூர்நாடு, புலியூர், சோழிங்கூர், விண்ணமங்கலம்.[2]
- காஞ்சிபுரம் மாவட்டம் - திருக்கழுக்குன்றம்: வள்ளிபுரம் - ஈசூர் பாலாற்றுப் பகுதி.[5]
- தென் ஆற்காடு பகுதிகள் - கொண்டிய நத்தம், மேல் பரிகம்.
- புதுச்சேரி - அரிக்கமேடு[1]
- சேலம் மாவட்டம் - சேவரி
- கோயமுத்தூர் மாவட்டம் - பெரியகுல்லே பாளையம்.
- திருச்சி மாவட்டம் - ஒத்தக்கோயில்
- மதுரை மாவட்டம்
- தேனி மாவட்டம் - கருப்பண்ணசாமி கோவில் மேடு, பெரியகுளம்.
- திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் - சைதங்கநல்லூர், கொற்கை, சாயர்புரம்.[6]
- தர்மபுரி மாவட்டம் - கொல்லப்பள்ளி, தொகரப்பள்ளி, பன்னிமடுவ, தயில்மலை, முள்ளிக்காடு, கப்பலாவடி, பர்கூர், கடத்தூர், மரிரெட்டிப்பள்ளி, மயிலாடும்பாறை, மோடூர், கொத்துக்குப்பம், வேடர் தத்தக்கல்.[7]
Remove ads
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads