தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம்

From Wikipedia, the free encyclopedia

தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம்
Remove ads

தமிழகத்தில் மத்திய பழங்கற்காலம் என்பது கிமு. 50,000 - கி.மு.20,000 வரை நிலவியது.[1] இக்காலத்தில் பெரிய எருது இனங்கள் வாழ்ந்தன. இவை பற்றிய எச்சங்கள் தமிழகத்தில் காணாவிடிலும் நர்மதை ஆற்றங்கரையில் காணப்படுவதால் அவை தமிழகத்திலும் வாழ்ந்ததாகக் கொள்ளலாம். கீழைப் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய குவாட்சயிட் கல்லாயுதங்களை விட மென்மை பொருந்திய செசுபர், சேட், அகேற், சல்செடனி ஆகிய கற்களில் இக்கால மக்கள் ஆயுதங்களை தயாரித்திருக்கின்றனர்.

Thumb
தமிழகத்தில் மத்திய பழங்கற்கால ஆயுதங்கள்
Thumb
செதிற்கல் நடுவில் உள்ளது
Thumb
செதிற்கல் உருவாகும் முறை
Remove ads

முக்கியத்துவம்

இக்கால மக்கள் மென்மை பொருந்திய கருவிகளை பயன்படுத்தினாலும் கீழைப் பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய குவாட்சயிட் கல்லாயுதங்களும் சேர்ந்தே இவற்றுடன் காணப்படுகின்றன. இதிலிருந்து சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவற்றை செய்துள்ளதாக தெரிவதால் இக்கால மக்கள் மரவுரி, மிருகத்தோல் போன்றவற்றை ஆடைகளாகப் பயன்படுத்தியது தெரிகிறது. கூர்க்கருவிகள் இருந்ததால் மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் குறைந்து மூங்கிலை கூர்தீட்டி அம்புகளாய் பயன்படுத்தும் தொழில் நுட்பம் இக்கால மக்களிடையே நிலவியது.

Remove ads

வளர்ச்சி

இக்கால கட்டத்தில் அனைத்து கற்கால தொழில்நுட்பங்களும் வளர்ந்தது. அவை,[2]

  1. கடினக்கல்லாயுதங்களான தழும்புரி, தழும்பழி போன்ற ஆயுதங்களில் இருந்து செதிற்கல்லாக வளர்ந்தது.
  2. கோடாரி, ஈட்டி போன்ற சிறிது தூரம் செல்லும் இலக்கு ஆயுதங்கள் குறைந்து வில் போன்ற நீண்ட இலக்கு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டன.
  3. கீழைப்பழங்கற்காலத்தவர் செதிற்கல் போன்றவற்றை கண்டுகொள்ளாமல் விட்டனர். ஆனால் இவர்கள் செதிற்கல்லிருந்து வில் தயாரிக்கும் தொழில்நுட்பம் கற்றுக் கொண்டனர்.
  4. இக்காலத்திலேயே மனிதன் தற்போதைய உருவம் அடைந்தான்.
Remove ads

களங்கள்

தமிழகத்தில் கொற்றலை ஆற்றங்கரை, அத்திரம்பாக்கம், புத்தமனுவங்கா போன்ற இடங்களில் இக்காலக் கருவிகளான சுரண்டல் கருவிகள், துளைக்கருவிகள், கூர்க்கருவிகள் போன்றவைக் காணப்படுகின்றன.[1] மேலும் குடியம் குகை, மதுரை மறத்தாறுக் கரையிலுள்ள பட்டுப்பட்டி, சிவராமப்பேட்டை, திருப்பத்தூர் போன்ற இடங்களிலும் இக்காலக் கருவிகள் காணப்படுகின்றன.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads