தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

From Wikipedia, the free encyclopedia

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
Remove ads

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (People’s Liberation Organization of Tamil Eelam PLOT, புளொட்) என்பது முன்னாள் ஈழப் போராளி இயக்கங்களில் ஒன்றாகும். இது பின்னர் இலங்கை அரசுக்கு ஆதரவான துணை-இராணுவக் குழுவாக இயங்கியது. இவ்வியக்கம் தற்போது சனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியாக இயங்குகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்து பின்னர் பிரிந்து சென்ற உமாமகேசுவரனால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் இன்றைய தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆவார்.

விரைவான உண்மைகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தலைவர் ...
Remove ads

வரலாறு

புளொட் 1980 ஆம் ஆண்டில் முன்னாள் நில அளவையாளர் க. உமாமகேஸ்வரன் (முகுந்தன்) என்பவரால் உருவாக்கப்பட்டது. இவர் 1977-80 காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்தவர். பாலத்தீன விடுதலை இயக்கத்தின் ஆதரவில் லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் இராணுவப் பயிற்சி பெற்றார். 1980 இல் வே. பிரபாகரனுடன் ஏற்பட்ட ஒரு கருத்து முரண்பாட்டை அடுத்து உமாமகேசுவரன் 1980 இல் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து புளொட் என்ற இயகத்தை ஆரம்பித்தார்.

Remove ads

விடுதலை தமிழ் தேசிய புலிகள் கட்சி

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads