தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல்கள், 2011-16

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருச்சிராப்பள்ளி மேற்கு இடைத்தேர்தல் 2011

எம். மரியம்பிச்சை மரணமடைந்ததை அடுத்து திருச்சிராப்பள்ளி மேற்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2011 அக்டோபர் 13 ல் நடந்தது. ஆளும்கட்சியான அதிமுக வெற்றி பெற்றது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் 2012

அமைச்சர் சொ. கருப்பசாமி மரணமடைந்ததை அடுத்து சங்கரன்கோவில் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் 2012 மார்ச்சு 18-ந்தேதி நடந்தது. அ.தி.மு.க. சார்பில் முத்துச்செல்வி, தி.மு.க. சார்பில் ஜவகர் சூரியகுமார், ம.தி.மு.க. சார்பில் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பில் முத்துக்குமார், பா.ஜ.க. சார்பில் முருகன் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். 242 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம் 1,59,760 வாக்குகள் பதிவாகின. இது 77.52 சதவீதம் ஆகும். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி இதில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் ஈட்டுத்தொகையை (Deposit) இழந்தனர்.

வார்ப்புரு:வாக்குச்சாவடிகளில்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

புதுக்கோட்டை இடைத்தேர்தல் 2012

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முத்துக்குமரன், விபத்தில் மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. புதுக்கோட்டை சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக வி. ஆர். கார்த்திக் தொண்டைமான், தேமுதிக வேட்பாளராக ஜாகீர் உசேன், ஐஜேகே வேட்பாளராக சீனிவாசன் ஆகியோர் போட்டியிட்டனர்.அ.தி.மு.க., வேட்பாளர் வி. ஆர். கார்த்திக் தொண்டைமான் 71 ஆயிரத்து 498 வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

வார்ப்புரு:வாக்குச்சாவடிகளில்

மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
Remove ads

ஏற்காடு இடைத்தேர்தல், 2013

2011 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. பெருமாள் வெற்றி பெற்றார். ஜூலை 18ம் தேதி, 2013இல் திடீர் மாரடைப்பு காரணமாக, பெருமாள் மரணம் அடைந்தார். காலியான ஏற்காடு தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு அக்டோபர் 6 அன்று அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 14 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.[1] இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் அறிவித்தார்.[2]

ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2014

திருவரங்கம் சட்டமன்ற இடைத்தேர்தல், 2015

திருவரங்கம் (சட்டமன்றத் தொகுதி)

  • ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது, இதன் தொடர்ச்சியாக அவர் செப்டம்பர் 27 2014 அன்று பதவியை இழந்தார். அதனைத்தொடரந்து இத்தொகுதியில் 13.02.2015 அன்று இடைத்தேர்தல் நடந்தது.

இடைத் தேர்தல், 2015 எஸ். வளர்மதி அதிமுக 1,51,561 - என். ஆனந்த் திமுக 55,045

ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2015

ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தல், 2015[3] ஆர். கே. நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வெற்றிவேல் பதவி விலகல் செய்ததையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 1 லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகள் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன் 9 ஆயிரத்து 710 வாக்குகள் பெற்றார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் தேர்தல் வைப்புநிதியை இழந்தனர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads