தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் (Central University of Tamil Nadu (CUTN) இந்திய நாடாளுமன்ற சட்ட எண் 25, மார்ச்சு, 2009-இன்படி நிறுவப்பட்டது.[3] இப்பல்கலைக்கழகத்துக்கு 30-09-2009-ஆம் நாளன்று, தமிழக முதல்வர் மு. கருணாநிதி முன்னிலையில், இந்திய நடுவண் அரசின் அமைச்சர் கபில் சிபல் அடிக்கல் நாட்டினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 55,000 சதுர அடி பரப்பளவில், தற்காலிக வளாகத்தில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகம் செயல்படுகிறது.
Remove ads
பயிற்றுவிக்கும் படிப்புகள்
தற்போது இயற்பியல், வேதியல், கணிதம் மற்றும் உயிர் அறிவியல் (Life Science) துறைகளில், ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் (Integrated Courses) (இளங்கலை மற்றும் முதுகலை இணைந்து) பயிற்றுவிக்கப்படுகிறது.
ஆங்கில மொழிப் பாடத்தில், முதுகலை மற்றும் முனைவர் படிப்பும் மற்றும் முதுகலை தமிழ் செம்மொழி படிப்புகள், மத்திய தமிழ் செம்மொழி நிறுவனத்துடன் (Central Institute of Classical Tamil (CICT) இணைந்து பயிலப்படுகிறது. மேலும் 2011-ஆம் கல்வி ஆண்டு முதல் ”சென்னை பொருளாதாரப் பள்ளியுடன்” (Madras School of Economics) இணைந்து, முதுகலை அறிவியலில் ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான (Integrated Courses) பொது மற்றும் நிதி சார்ந்த பொருளாதார படிப்புகள் (General and Finance base Economics) துவக்கப்பட்டுள்ளது.[4]
மத்தியப் பொது நுழைவுத் தேர்வு (common entrance examination CUCET ) மூலம் இப்பல்கலைக் கழகத்திற்கு மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.[5] ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான (Integrated Courses) ”இளங்கலை ஆசிரியர் பயிற்சி” படிப்பு மற்றும் ”இளங்கலை சட்டப் படிப்பு” (B.Ed - LL.B) தேசிய சட்டப் பல்கலைக் கழகத்துடன் (National School of Law University) ஒருங்கிணைந்து பயிற்றுவிக்கப்படுகிறது.
இரண்டு வருட ”மக்கள் தொடர்பியல்” (Mass Communication) படிப்புகள் மற்றும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பான (Integrated Courses) முதுகலை சமுக அறிவியல் (M.A. Social Sciences) படிப்புகள் ”டாடா சமுகஅறிவியல் நிறுவனத்துடன்” (The Tata Institute of Social Sciences) இணைந்து பயிற்றுவிக்கப்படுகிறது.
Remove ads
வளாகம்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக வளாகம் திருவாரூரில் உள்ள நீலக்குடி மற்றும் நாககுடி கிராமங்களை உள்ளடக்கி சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
வெளியிணைப்புகள்
- தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2014-06-28 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads