கோவிந்தராசன் பத்மநாபன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோவிந்தராசன் பத்மநாபன் (Govindarajan Padmanaban)(பிறப்பு 20 மார்ச் 1938, சென்னை) என்பார் இந்திய உயிர்வேதியியலாளர் மற்றும் உயிரி தொழில்நுட்பவியலாளர் ஆவார். இவர் இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) முன்னாள் இயக்குநராக இருந்தார். தற்போது ஐ.ஐ.எஸ்.சி.யில் உயிர் வேதியியல் துறையில் கெளரவ பேராசிரியராக பணியாற்றுகிறார். இவருக்கு அறிவியல் துறையில் ஆற்றிய வாழ்நாள் சாதனைகளுக்காக இந்திய அரசால் 2024 ஆம் ஆண்டில் முதன் முதலாக வழங்கப்படுகின்ற விஞ்யான் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.[1]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
பத்மநாபன் பொறியாளர்களின் குடும்பத்தினைச் சார்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனால் பெங்களூரில் குடியேறினார். பெங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பொறியியலில் அதிக ஆர்வமின்மை காரணமாகச் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் மண் வேதியியலில் முதுகலைப் படிப்பையும், முனைவர் பட்ட ஆய்வினை 1966இல் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் ( ஐ.ஐ.எஸ்.சி ) உயிர் வேதியியலில் பெற்றார்.[2]
Remove ads
ஆராய்ச்சி
தனது ஆராய்ச்சியின் ஆரம்ப ஆண்டுகளில், இவர் கல்லீரலில் யூகாரியோடிக் மரபணுக்களின் வரிவடிவாக்க ஒழுங்குமுறையில் பணியாற்றினார். செல்களின் செயல்முறைகளில் பன்முகப் பங்கைத் தெளிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டினார். இவரது ஆய்வுக் குழுவினர் மலேரியா ஒட்டுண்ணியில் உள்ள ஹீம்-உயிரி உற்பத்தி வழி அமைவில் மருந்தின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தடுப்பூசி வளர்ச்சியிலும் இவர் ஆர்வம் காட்டியுள்ளார். இவர்கள் குர்குமினின் மலேரியா எதிர்ப்புத் தன்மை மற்றும் கூட்டுச் சிகிச்சையில் இதன் செயல்திறனை ஆராய்ந்ததில் 2004ஆம் ஆண்டு வெற்றிபெற்றனர்.[3]
Remove ads
விருதுகள்

- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நகர் பரிசு (1983) [ மேற்கோள் தேவை ][ மேற்கோள் தேவை ]
- பத்மஸ்ரீ (1991) [4]
- பத்ம பூஷண் (2003)
- தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பெல்லோஷிப் [5]
- விஞ்ஞான ரத்னா விருது (2024)[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads