தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் என்பது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் ஒரு இலக்கிய அமைப்பு ஆகும். 1975 ஆம் ஆண்டு சூலை 11 மற்றும் 12 திகதிகளில் மதுரையில் நடைபெற்ற செம்மலர் இலக்கிய இதழின் எழுத்தாளர்களின் மாநாட்டில் அமைக்கப்பட்டது தான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், பேச்சாளர்கள் என அனைவரையும் இணைத்த ஒரு சங்கம் ஆகும். [1]

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
Remove ads

துவக்கம்

செம்மலரில் சிறுகதை, கவிதை, கட்டுரைகள், எழுத அணிதிரட்டிய 13 எழுத்தாளர்களுக்கென 1971ஆம் ஆண்டு தமிழகத்தின் முன்னணி முற்போக்கு இலக்கிய பேச்சாளர் என். சங்கரய்யா அவர்கள் ஓர் பயிற்சி வகுப்பு நடத்தினார். இந்த பயிற்சி வகுப்பில் மக்களுக்கான கலை இலக்கிய வடிவங்களை முன்னெடுத்துச் செல்வது, மிகப் பழமையான கலைவடிவங்களை பாதுகாப்பது போன்ற உத்திகள் கற்றுத்தரப்பட்டது. தொடர்ச்சியாய் தமிழகத்தின் பல பகுதியிலிருந்து எழுத்தாளர்கள் எழுதத்துவங்கி 4 ஆண்டுகளில் வளர்ந்து 1975ஆம் ஆண்டில் மாநாடை நடத்தும் அளவிற்கு மாறியது.[1]

தமுஎகசவின் முதல் அமைப்பு மாநாடு 1975 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் அமைப்பின் கொள்கை, சட்டவிதிகள் என அமைப்பு ரீதியான வடிவம் பெற்றது. அதன் தலைவராக முத்தையாவும் பேராசிரியர் இரா. கதிரேசன் பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1] அன்று முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு 2024 வரை 15 மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தபட்டுள்ளன.

Remove ads

செல்பாடுகள்

தமுஎகச தமிழ்நாட்டின் பல நகரங்களில் கலை இரவுகளை நடுத்தியுள்ளது. அதில் உரைவீச்சு, பட்டிமன்றம், கவிச்சாரம், நாடகம், பறையிசை, தேவராட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்வுகளை நடத்தியுள்ளது.

ம. கோ. இராமச்சந்திரன் முதல்வராக இருந்த காலத்தில் உச்ச திரைப்பட தணிக்கை மசோதா ஒன்றை ஆட்சியாளர்கள் கொண்டுவந்தனர். இதை எதிர்த்து தமுஎகச மாநில்ம தழுவிய ஆர்பாட்டங்களை முன்னெடுத்தது. அதற்கு பின்னர் வந்த அரசு அந்த மசோதாவைக் கைவிட்டது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் புதினம் குறித்த சர்ச்சை ஏற்பட்டபோது, மாவட்ட நிர்வாகம் போட்ட ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி கருத்துரிமைக்கு ஆதரவாக தமுஎகச நீதிமன்றம் சென்று அதில் வெற்றிபெற்றது.[2]

Remove ads

மேலும் பார்க்கவும்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கப் பரிசுகள் மற்றும் விருதுகள்

சான்றாவணம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads