தமுக்கம் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமுக்கம் அரண்மனை (Tamukkam Palace) அல்லது இராணி மங்கம்மாள் அரண்மனை, தமிழ்நாடு மாநிலத்தில், மதுரையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பழமையான அரண்மனையாகும்.[1] தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள். 1670ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, நாயக்க வம்சத்தை சேர்ந்த இராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் கர்நாடக் நவாபிடம் இருந்தது.[சான்று தேவை] ஆங்கிலேயோர் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. 1959இல் காந்தி அருங்காட்சியகமாக மற்றப்பட்டது.[2][3] அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்ற தமுக்கம் மைதானமும் இந்த அரண்மனையைச் சேர்ந்ததாகும்.


இந்த அரண்மனையின் பின்புறம் ஒரு பெரிய ஏரி உருவாக்கப்பட்டு, அதன் தண்ணீரில் அலையடிக்கும் அளவில் உருவாக்கப்பட்டது. இராணி மங்கம்மாள் கடல் காற்று போன்ற காற்று வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஏரி உருவாக்கப்பட்டது. அதன் இன்றைய பெயர் வண்டியூர் கண்மாய் ஆகும். அன்றைய ஏரி சுருங்கி, தற்போது கண்மாயாக ஆகிவிட்டது.
மேலும் இந்த அரண்மனையில் இராணியின் அறையின் மேல் பகுதியில் ஒரு ஓட்டை உள்ளது. அதில் காலை நேரத்தில் மட்டும் அந்த அறைக்குள் புகும் சூரிய ஒளி தலையில் மட்டும் படும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அந்த சூரிய ஒளியின் வெப்பத்தில் இராணி குளித்துவிட்டு வந்து தலைமுடியை உணர்த்துவார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads