தம்தமா சாகிபு

From Wikipedia, the free encyclopedia

தம்தமா சாகிபு
Remove ads

தம்தமா சாகிபு (Damdama Sahib) எனும் இவ்வூர், வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டிண்டா மாவட்டத்திலிருந்து தென்கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில், பஞ்சாப்-அரியானா எல்லையில் உள்ள தல்வண்டி சபோ எனுமிடத்தில் அமைந்துள்ளது. இது சீக்கியர்களின் :ஐந்து அரியணைகளில் ஒன்றாகும். தக்த் சிறீ தர்பார் சாகிபு தம்தமா சாகிபு (Takht Sri Darbar Sahib Damdama Sahib) என விரிவான பெயருடன் அறியப்படும் இது, பஞ்ச தக்து அல்லது சீக்கிய உலகின் அதிகாரத்தின் ஐந்து அரியணைகளின் ஒன்றாக 'தக்து சிறீ தம்தமா சாகிபு' ஒன்றாகும்..[3]

விரைவான உண்மைகள் தம்தமா சாகிபு, பொதுவான தகவல்கள் ...
Remove ads

பின்னணி

கி.பி 1705-ல் சீக்கிய சமய பத்து குருக்களில் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங் என்பவர், சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிபு (ஆதி கிரந்தம்) எனும் நூலின் முழு பதிப்புகளையும் இவ்விடத்தில் தயாரித்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும், முகாலயர்களுடன் நடந்த போருக்குப் பின் இங்கு ஓய்வெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.[4]

புனித காரணிகள்

இத்தலத்தின் வளாகத்தினுள் 10 குருத்வாராக்களும், மூன்று புனித நீர்த்தொட்டிகளும் உள்ளன. 1510-ல், சீக்கிய மதத்தின் நிறுவனரும், மற்றும் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குருவான குரு நானக் இங்கு வந்தபோது முதல் தொட்டி உருவாக்கப்பட்டது. 'குருசார் சரோவர்', 'அகால்ஸார் சரோவர்' என்ற இரண்டாவது மூன்றாவது தொட்டிகளில் நீர் அருந்துவது நோய்களைத் தீர்ப்பதாகச் தொன் நம்பிக்கையாக கருதப்படுகிறது..[5]

சீக்கியர்களின் பிற நான்கு தக்த்துகள் (அரியணைகள்)

  1. ஹர்மந்திர் சாஹிப் குருத்துவார் வளாகத்தில் உள்ள– அகால் தக்த் - அமிர்தசரஸ், பஞ்சாப்
  2. அனந்தபூர் சாகிப் குருத்துவார் - அனந்த்பூர் சாஹிப், ரூப்நகர் மாவட்டம், பஞ்சாப்
  3. ஹசூர் சாகிப் குருத்துவார், நான்தேட், மகாராட்டிரம்
  4. பாட்னா சாகிப் குருத்துவார் - பாட்னா, பீகார்

பிற நான்கு இருக்கைகளின் படிமங்கள்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads