தர்மவரம்
ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தர்மவரம் (Dharmavaram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஸ்ரீசத்ய சாய் இருக்கும் ஒரு நகரமாகும். கைத்தறி பட்டுச்சேலைகளுக்கு இந்நகரம் மிகவும் புகழ்பெற்ற நகரமாகும். மேலும் இந்நகரம் பஞ்சு, பட்டு நெசவு தொழிலகங்கள் மற்றும் தோல் பொம்மைகள் போன்றனவற்றிற்கும் புகழ்பெற்ற நகரமாக உள்ளது[3].
Remove ads
புவியியல் அமைப்பு
14.43° வடக்கு 77.72° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் தர்மவரம் நகரம் பரவியுள்ளது [4]. மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 345 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.
பெயர்க்காரணம்
தர்மவரம் நகரில் உள்ள தண்ணீர்த்தொட்டியை கிரியசக்தி ஒதியார் என்பவர் கட்டினார். அவருடைய தாயாரின் பெயரான தர்மாம்பாள் என்ற பெயரிலிருந்து இந்நகரத்திற்கான பெயர் சூட்டப்பட்டுள்ளது[3].
நிர்வாகம்
நகராட்சி நிர்வாகம்
1 ஏப்ரல் 1964ல் நிறுவப்பட்ட தர்மாவரம் நகராட்சி, தற்போது சிறப்பு நிலை நகராட்சி தகுதி பெற்றுள்ளது.[5] 42.5 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட தர்மாவரம் நகராட்சி மன்றம் 40 உறுப்பினர்களைக் கொண்டது.[6][6]
மக்கள்தொகை பரம்பல்
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, தர்மாவரம் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,21,874. அதில் ஆண்கள் 62.250 ஆகவும், பெண்கள் 59,624 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 958 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்கள் 77,564 (71.07 %) ஆகவுள்ளனர்.
மக்கள்தொகையில் இந்துக்கள் 85.73 % ஆகவும், இசுலாமியர் 13.68 % ஆகவும், மற்றவர்கள் 0.68% ஆகவுள்ளனர்.[7]
பொருளாதாரம்
தூய்மையான பட்டுச்சேலைகளுக்கு இந்நகரம் புகழ்பெற்றது. நகரத்தின் பொருளாதாரம் நெசவுத் தொழிலையே சார்ந்துள்ளது. தர்மவரத்தில் மழைபொழிவு குறைவாக இருப்பதால், நிலத்தடி நீரைக் கொண்டு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
போக்குவரத்து
ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்து நிறுவனம்[8] தர்மவரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவையை இயக்குகிறது. பெங்களூரு – ஐதராபாத் தொடருந்துப் பாதையில் தர்மாவாரம் சந்திப்பு தொடருந்து நிலையம் பிரதானமாக இருக்கிறது.[9]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads