தர்மேந்திரா

திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

தர்மேந்திரா
Remove ads

தர்மேந்திரா (Dharmendra) என்று அழைக்கபடும் தரம் சிங் தியோல் (பிறப்பு: 8 திசம்பர், 1935) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி ஆவார். 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.

விரைவான உண்மைகள் தர்மேந்திரா, இந்திய மக்களவை உறுப்பினர் ...

இவர் இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று 1975 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படப் பாத்திரமாகும்.[2]

இவர் ராஜஸ்தானில் உள்ள பிகானேர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 14 வது மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது இவருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[3]

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

தர்மேந்திரா எனப்படும் தஞ்சம் சிங் தியோல் 1935 டிசம்பர் 8 ஆம் நாள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன் சிங் தியோல் மற்றும் சத்வந்த் கவுர் ஆகியோருக்கு மகளாக பஞ்சாபி ஜாட் சீக்கியர் குடும்பத்தில் பிறந்தார்.[4][5][6] இவரது மூதாதையர் கிராமம் லூதியானாவின் பக்கோவால் தெஹ்ஸில் ரெய்கோட்டிற்கு அருகிலுள்ள டாங்கன் சிற்றூர் ஆகும் .[7]

இவர் தனது ஆரம்ப வாழ்க்கையை சஹ்னேவால் கிராமத்தில் கழித்தார். லூதியானாவின் லால்டன் கலனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அங்கு இவரது தந்தை கிராமப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.[8] 1952 இல் இவர் பக்வாராவின் ராம்கரியா கல்லூரியில் இடைநிலை படிப்பை மேற்கொண்டார்.[9]

Remove ads

தொழில்

திரைப்பட நடிகராக

தர்மேந்திரா தேசிய அளவில் புகழ்பெற்ற பிலிம்பேர் பத்திரிகையின் நியூ டேலண்ட் அவார்ட் என்ற விருதை வென்று அங்கு வாக்குறுதியளிக்கப்பட்ட திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக, பஞ்சாபிலிருந்து மும்பைக்குச் சென்றார். ஆனால் அந்தப்படம் படம் தயாரிக்கப்படவில்லை. பின்னர் இவர் 1960 இல் அர்ஜுன் ஹிங்கோரானியின் தில் பீ தேரா ஹம் பீ தேரே படத்தில் அறிமுகமானார்.[10] 1961 ஆம் ஆண்டில் பாய் ஃப்ரெண்ட் படத்தில் இவர் ஒரு துணை வேடத்தில் நடித்தார். பின்னர் 1960 மற்றும் 1967 க்கு இடையில் பல காதல் படங்களில் நடித்தார்.

இவர் நடிகை நூதனுடன் சூரத் அவுர் சீரத் (1962), பந்தினி (1963), தில் நே பிர் யாட் கியா (1966), துல்ஹன் ஏக் ராத் கி (1967) ஆகிய படங்களிலும், நடிகை மாலா சின்ஹாவுடன் அன்பத் (1962), பூஜா கே பூல் (1964), அன்கெய்ன் (மிகப் பெரிய வெற்றி), பஹாரன் பிர் பி ஆயெங்கி, ஆகாஷ்டீப்பில் நந்தாவுடன் மற்றும் ஷாதியில் சாய்ரா பானு மற்றும் ஆயி மிலன் கி பேலா (1964) ஆகியோருடன் நடித்தார். தர்மேந்திரா நடிகை மீனாகுமாரியுடன் வெற்றிகரமான ஜோடியாக உருவாகி, மெயின் பீ லட்கி ஹூன் (1964), காஜல் (1965), பூர்ணிமா (1965), பூல் அவுர் பட்டர் (1966), மஜ்லி திதி (1967), சந்தன் கா பால்னா (1967) மற்றும் பஹரோன் கி மன்ஸில் (1968) படங்களில் நடித்தார். இவரது முதல் அதிரடி படமான பூல் அவுர் பட்டர் (1966) படத்தில் தனி நாயகன் வேடத்தில் நடித்தார். 1960 களில் மீனாகுமாரி மற்றும் தர்மேந்திரா ஆகியோருக்கு இடையில் நெருங்கிய உறவு இருந்தது என்று நீண்ட காலமாக பேசபட்டுவந்தது.[11][12][13] அந்தக் காலத்தின் இவர் திரைப்படத்துறையில் உச்ச இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள மீனாகுமாரி உதவினார். [14] பூல் அவுர் பதார் படமானது 1966 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாகவும், தர்மேந்திராவுக்கு சிறந்த நடிகருக்கான முதல் பிலிம்பேர் பரிந்துரையைப் பெற்றுத் தந்ததாகவும் இருந்தது.[15] அனுபமா படத்தில் அவரது நடிப்பு விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[16] இப்படத்தில் இவரது நடிப்பை அங்கீகரிக்கும் விதமாக 14 வது தேசிய திரைப்பட விருதுகளில் இவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.[17] ஆயி மிலன் கி பேலா, ஆயா சவான் ஜூம்கே, மேரே ஹம்டும் மேரே தோஸ்த், பியார் ஹாய் பியார் மற்றும் ஜீவன் மிருத்யு போன்ற படங்களில் இவர் காதல் கொப்பளிக்கும் வேடங்களில் நடித்தார். ஷிகார், பிளாக்மெயில், கப் கியூன் அவுர் கஹான், கீமத் போன்ற சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடித்தார். 1971 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற திரைப்படமான மேரா காவ்ன் மேரா தேஷில் அதிரடி நாயகன் வேடத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகருக்கான பரிந்துரையைப் பெற்றார். காதல், அதிரடி நாயகனாக நடித்த இவர் 1975 வாக்கில் பல்துறை நடிகராக அழைக்கப்படத் தொடங்கினார். இவரது மிக வெற்றிகரமான ஜோடியாக ஹேம மாலினி இருந்தார். ஹேமா மாலினி இவரது மனைவியாக ஆனார்.[10] ராஜா ஜானி, சீதா அவுர் கீதா, ஷராபத், நயா ஜமனா, பத்தர் அவுர் பயல், தும் ஹசீன் மெயின் ஜவான், ஜுக்னு, தோஸ்த், சரஸ், மா, சாச்சா பாட்டிஜா, ஆசாத், ஷோலே உள்ளிட்ட பல படங்களில் இவர்களை இணைந்து நடித்தனர். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க சிறந்த படங்களில் இருசிகேசு முகர்ச்சியுடன் நடித்த சாத்யகம்,[18] மற்றும் ஷோலே ஆகியன குறிப்பிடபடுகின்றன. இவை "எல்லா காலத்திற்கும் பாலிவுட்டில் பார்க்க வேண்டிய முதல் 25 படங்களில் சேர்ந்தவை" என்று இந்தியா டைம்ஸ் பட்டியலிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில், 50 வது ஆண்டைய பிலிம்பேர் விருதுகளின் நீதிபதிகள் ஷோலே படத்துக்கு 50 ஆண்டுகால பிலிம்பேர் சிறந்த திரைப்படத்தின் சிறப்பு விருதை வழங்கினர்.  

தர்மேந்திரா 1976 முதல் 1984 வரையாலான காலகட்டத்தில் நட்சத்திர முக்கியத்துவம் கொண்ட ஏராளமான படங்களில் நடித்தார் அவை; தர்மம் வீர், சரஸ், ஆசாத், கட்டிலோன் கே காட்டில், கசாப், ராஜ்புத், பகவத், ஜானி தோஸ்த், தர்ம் கானூன், மெயின் இன்டெக்வாம் லூங்கா, ஜீன் நஹி டூங்கா, ஹுகுமாத் உள்ளிட்ட பல அதிரடி படங்களில் தர்மேந்திரா நடித்தார். மற்றும் ராஜ் திலக். ராஜேஷ் கன்னாவுடன் இவர் டிங்கு, ராஜ்புத் மற்றும் தர்ம் கானூன் ஆகிய படங்களில் நடித்தார், இவை அனைத்தும் வெற்றி பெற்றன, இருப்பினும் இவர்கள் சிறப்பத் தோற்றத்தில் நடித்தப்படமே இவர்களின் கடைசி படாக ஆனது; மொஹாபத் கி கசம் (1986) ஒரு தோல்விப்படமாக ஆனது.[19] ஜீந்திராவுடன் தர்மவீர், சாம்ராட், எரியும் ரயில், ஜான் ஹதேலி பெ, கினாரா, தரம் கர்மா மற்றும் நஃப்ரத் கி ஆந்தி ஆகிய படங்களில் பணியாற்றினார் . ஷாலிமார், கயாமத், ஜான் ஹதெலி பெ, ஜூட்டா சாச், சீதம்கர், புரொபசர் பியரேலால், பாண்டேபாஸ் ஆகிய படங்களில் எத்தனாக அல்லது சண்டியராக நடித்தார்..

தொலைக்காட்சி

2011 ஆம் ஆண்டில், பிரபலமான ரியாலிட்டி ஷோவான இந்தியாஸ் காட் டேலண்டின் மூன்றாவது பருவத்தில் நடுவராக சஜித் கானுக்கு பதிலாக தர்மேந்திரா நியமிக்கப்பட்டார்.[20]

2011 ஜூலை 29 அன்று, இந்தியா காட் டேலண்ட் கலர்ஸ் தோலைக்காடசியில் ஒளிபரப்பப்பட்டது இதில் புதிய நடுவராக தர்மேந்திரா இடம்பெற்றார். இந்த நிகழ்ச்சியின் மற்றும் முந்தைய இரண்டு பருவங்களைவிட இது மிகுதியான பார்வையாளர்களை பெற்றது.[21]

திரைப்பட தயாரிப்பாளராக

1983 ஆம் ஆண்டில் தியோல் விஜய்தா பிலிம்ஸ் என்ற பெயரில் ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை துவக்கினார். 1983 இல் வெளியான அதன் முதல் முயற்சியான பீட்டாப், படத்தில் சன்னி தியோல் முதன்மைப் பாத்திரத்தில் அறிமுகப்படார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும். 1990 ஆம் ஆண்டில் சன்னி நடித்த கயல் என்ற அதிரடி திரைப்படத்தை தயாரித்தார். இந்த படம் சிறந்த திரைப்பட விருது உட்பட ஏழு பிலிம்பேர் விருதுகளை வென்றது . இது சிறந்த பொழுதுபோக்கு, பிரபல திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. தர்மேந்திரா தனது இளைய மகன் பாபியை 1995 இல் பார்சாட்டில் பட்டதில் அறிமுகப்படுத்தினார்.[22]

அரசியல்

தர்மேந்திரா பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக 2004 முதல் 2009 வரை ராஜஸ்தானில் பிகானேர் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்துக்கு ( மக்களவை ) தேர்ந்தெடுகபட்டு பணியாற்றினார்.[23] இவர் அரிதாகவே பாராளுமன்றக் கூட்டங்களில் கலந்து கொண்டார், இவர் திரைப்படப் படப்பிடிப்பு அல்லது தனது பண்ணை வேலைகளை பார்க்க பண்ணை வீட்டில் நேரத்தை செலவிடவே விரும்பினார்.[24]

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

Thumb
தர்மேந்திரா தனது மகன்களான பாபி தியோல் மற்றும் சன்னி தியோலுடன்

தர்மேந்திராவின் முதல் திருமணம் 1954 இல் இவரது 19 வயதில் பிரகாஷ் கவுருடன் நடந்தது.[25] இவரது முதல் திருமணத்தின் மூலமாக, இவருக்கு இரண்டு மகன்களான, சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் ஆகியோர் வெற்றிகரமான நடிகர்களாக உள்ளனர். மேலும் விஜீதா மற்றும் அஜீதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

பம்பாய்க்குச் சென்று திரைப்படத் தொழிலில் இறங்கிய பின்னர், முதல் மனைவி விவாகரத்து அளிக்காததால் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இஸ்லாத்திற்கு மாறி ஹேம மாலினியை மணந்தார் எனபட்டது.[26] ஆனால் பின்னர் இவர் இஸ்லாமிற்கு மாறியதை மறுத்தார். இவரும் மாலினியும் 1970 களின் முற்பகுதியில் வெற்றிப் படமான ஷோலே உட்பட பல திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.[27] இந்த தம்பதியினருக்கு ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Thumb
ஈஷா தியோலின் திருமணத்தில் ஹேமா மாலினி [தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி]

தர்மேந்திரா பிரபல பாடகி நடிகை சுரையாவின் பெரும் ரசிகர். இவர் அவரது 'தில்லாகி' (1949) திரைப்படத்தை 40 முறை பார்த்ததாகக் கூறுயுள்ளார், திரையரங்கத்துக்குச் செல்ல தனது சொந்த ஊரான சஹ்னேவாலில் இருந்து பல மைல் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. 2004 ஆம் ஆண்டில் அவர் இறந்தபோது, பெரும்பாலான நடிகர்கள் இந்த நிகழ்வை தவறவிட்டனர் என்றாலும், இந்த இறுதி சடங்கில் தர்மேந்திரா கலந்து கொண்டார்.[28][29][30][31]

தர்மேந்திராவின் பேரன், பாபி தியோலின் மகனுக்கு தர்மேந்திராவின் இயற்பெயரான "தரம் சிங் தியோல்" என்று பெயரிடப்பட்டுள்ளது.[32]

விருதுகள்

குடிமை விருது

தேசிய திரைப்பட விருதுகள்

  • 1991 - கயலுக்கு (தயாரிப்பாளர்) சிறந்த பொழுதுபோக்கு, பிரபலமான திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது.

பிலிம்பேர் விருதுகள்

வெற்றியாளர்
பரிந்துரைக்கப்பட்டல்
  • 1965 - ஆயி மிலன் கி பேலாவுக்கு பிலிம்பேர் சிறந்த துணை நடிகருக்கான விருது
  • 1967 - பூல் அவுர் பட்டருக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
  • 1972 - மேரா காவ்ன் மேரா தேஷுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
  • 1974 - யாதோன் கி பராத்துக்கான சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
  • 1975 - ரேஷம் கி டோரிக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது
  • 1984 - ந au கர் பிவி கா படத்திற்கான பிலிம்பேர் சிறந்த நகைச்சுவை நடிகர் விருது
Remove ads

திரைப்படவியல்

அண்மைய படங்கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பெயர் ...

தயாரிப்பாளர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படம் ...
Remove ads

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads