தற்கால உயிரிகளின் ஆய்வு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தற்கால உயிரிகளின் ஆய்வு (Neontology) என்பது உயிரியலின் ஒரு பிரிவாகும். இது தொல்லுயிரியல் பிரிவிற்கு மாறாக வாழும் சிற்றினங்கள், பேரினங்கள், குடும்பம் உள்ளிட்ட இதர வகையான உயிரினங்களுடன் தொடர்புடையது. இது அழிந்துபோன மற்றும் மரபற்றழிந்த உயிரிகள் பற்றி தவிா்த்தும் உள்ளது. உதாரணமாக:

  • மூஸ் கடமானானது வழக்கிலுள்ள சிற்றினம் மற்றும் டோடோ பழங்கால மரபற்றழிந்த சிற்றினம் ஆகும்.
  • 1987ஆம் ஆண்டில் மெல்லுடலிகள் தொகுதியில் உள்ள தலைக்காலிகளில் 600 வழக்குள்ள சிற்றினங்கள் மற்றும் 7500 பழங்கால மரபற்றழிந்த சிற்றினங்களாகும்.[1]

உயிரின வகையின் குழுமம் (taxon) பழங்கால மரபற்றழிந்த சிற்றினங்களை வகைப்படுத்தப்பட்டுள்ளது அல்லது உயிரினத்தொகுதியில் இந்த உயிரினங்கள் இல்லை எனச்சான்று வழங்கியுள்ளது. மறுதலையாக, மரபற்றழிந்த உயிரின வகையின் குழுமம் வழக்குள்ள சிற்றினங்களை ("Lazarus species"), மறுவகைப்பட்டியலில் இணைக்கமுடியும் அல்லது ஏற்கனவே மரபற்றழிந்த சிற்றினங்களை உயிரின வகையின் குழுமத்தின் உறுப்பினா்களால் மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்கால உயிரிகளின் ஆய்வாளா்கள் (Neontologist) என்ற வாா்த்தையானது தொல்லுயிரியல் ஆய்வாளா்களால் அல்லாதவா்களிலிருந்து தொல்லுயிரியல் ஆய்வாளா்களால் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலான உயிரியலாளர்கள், விலங்கியல் வல்லுநர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் நடைமுறையில் தற்கால உயிரிகளின் ஆய்வாளா்களாக உள்ளனர். மேலும் தற்கால உயிரிகளின் ஆய்வாளா்கள் என்ற சொல் பெரும்பாலும் பழங்காலவியல் அல்லாதவர்களைக் குறிப்பிடும் பழங்கால ஆராய்ச்சியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. தற்கால உயிரிகளின் ஆய்வு பற்றி ஸ்டீபன் ஜே கோல்ட் இவ்வாறு கூறினார்:

“அனைத்து அறிஞா்களும் அவா்களது குறுகிய கோட்பாடுகளை வலுப்படுத்துவதுடன் மற்றும் தொல்லுயிரியல் ஆய்வாளா் அல்லாதவா்கள் நமக்கு மன்னி்ப்பு கொடுப்பாா்கள் என நம்புகிறேன். நாம் அனைவரும் தொல்லுயிரியல் ஆய்வாளா்கள். ஆகவே நமக்கு தேவை நமது மூதாதியரின் நவீன மனிதனின் பற்றியதாகும் அல்லது சூழ்நிலையியல் காலமாகும். நாம் அனைவரும் தற்கால உயிரிகளின் ஆய்வாளா்கள். நாம் அனைவரும் இந்த இயற்கையான இரு சமமற்ற மற்றும் குறுகிய கோட்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்”.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads