தலாத் மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தலாத் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Dalat; ஆங்கிலம்: Dalat District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; முக்கா பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டம் ஓயா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைநகரத்தின் பெயர் தலாத்.[1]
இந்த மாவட்டம் 905.29 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் துணை மாவட்டமான ஓயா துணை மாவட்டம் 147.47 சதுர கி.மீ. பரப்பளவைக் பரப்பளவைக் கொண்டது.[2]
Remove ads
வரலாறு
மாவட்டத்தின் சுருக்கமான வரலாறு:
- 2 ஏப்ரல் 1974 - தலாத் நகரத்தை நிர்வாக மையமாகக் கொண்டு, தலாத் ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் சிபு பிரிவின் கீழ் இருந்தது; மற்றும் ஓயா (Oya), பெரும் தலாத் (Dalat Proper), நங்கா பாவோ (Nanga Baoh), நங்கா தமின் (Nanga Tamin), இசுதாபாங் (Stapang), இசுகிம் செகுவா (Skim Sekuau) மற்றும் நங்கா பாக்கோ (Nanga Pakoh) ஆகிய இடங்களை உள்ளடக்கி இருந்தது. மாவட்டத்தில் 4 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 115 நீள வீடுகள் இருந்தன.
- 1 மார்ச் 2002 - முக்கா பகுதி முக்கா பிரிவு என தரம் உயர்த்தப்பட்டது; மாவட்டத்தில் 3 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 22 நீள வீடுகள் இருந்தன.
Remove ads
மக்கள்தொகையியல்
மலேசிய புள்ளியியல் துறையின் 2020-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தலாத் மாவட்டம் 21,147 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது.
பொருளாதாரம்
தலாத் மாவட்டத்தின் முக்கிய வேளாண் விளைபொருள் சவ்வரிசி மாவு ஆகும். 28,765 எக்டர் வேளாண் நிலம் சவ்வரிசி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 4 சவ்வரிசி மாவு தொழிற்சாலைகள் நாள் ஒன்றுக்கு 75 டன் சவ்வரிசி மாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.[3]
மொழிகள்
இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் மெலனாவு மொழியைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு கிராமத்திற்கும் இடையே மொழி வேறுபாடு உள்ளது.
இருப்பினும், அவர்கள் அந்த மொழியின் பேச்சுவழக்குகளை நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள். மலாய் மொழி, சரவாக் மலாய் மொழி, இபான் மொழி, மாண்டரின் மொழி, ஹொக்கியன் மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.
கல்வி
இந்த மாவட்டத்தில் தலாத் தேசிய மேல்நிலைப்பள்ளி (1977-இல் நிறுவப்பட்டது); மற்றும் ஓயா தேசிய உயர்நிலைப்பள்ளி (2004 இல் நிறுவப்பட்டது) என இரண்டு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேலும் மாவட்ட அதிகார வரம்பிற்குள் 25 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன.
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads