தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ (Dadra and Nagar Haveli and Daman and Diu, (DNHDD)) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள, இந்தியாவின் ஓர் ஒன்றியப் பகுதியாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தமன் நகரம் ஆகும்.
தாமன் மற்றும் தியூ & தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளை இணைத்து, இப்புதிய ஒன்றியப் பகுதியை 26 சன்வரி 2020 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[4][5][6][7]
Remove ads
வரலாறு
இந்திய விடுதலைக்கு முன்னர் இப்பகுதிகள் கோவா போன்று போர்த்துகேயர்கள் நிர்வாகத்தில் இருந்தது. 1961-ஆம் ஆண்டில் இப்பகுதிகளை போர்த்துகேயர்களிடமிருந்து கைப்பற்றி, இந்திய அரசின் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் ஆலோசனையின் படி, இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 26 சனவரி 2020 அன்று முதல் தாமன் மற்றும் தியூ & தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகிய இரண்டு ஒன்றியப் பகுதிகளை, ஒன்றாக ஒன்றிணைத்து இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நிர்வாகியின் கீழ் செயல்படுகிறது.
Remove ads
புவியியல்
இந்த ஒன்றியப் பகுதி தொடர்ச்சியற்ற நான்கு பகுதிகளைக் கொண்டது. இந்த ஒன்றியப் பகுதியின் நிலப்பரப்புகள் குஜராத் மாநிலக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது.
மாவட்ட நிர்வாகம்
இந்த ஒன்றியப் பகுதி டையு (தியூ), தமன் மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிகக்ப்பட்டுள்ளது. இதில் தியூ மட்டுமே தீவுப் பகுதியாகும்.
மாவட்டங்கள்
அரசியல்
இந்த ஒன்றியத்தில் தாத்ரா நகர அவேலி மற்றும் தாமன் தியூ என இரண்டு மக்களவைத் தொகுதிகள் உள்ளது.
உயர் நீதிமன்றம்
இந்த ஒன்றியப் பகுதிகளின் நீதிமன்றங்கள், மும்பை உயர் நீதிமன்றத்தின் வரம்புக்குட்பட்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads