தாமரைக் கோபுரம்

இலங்கையின் கொழும்பில் உள்ள தொலைதொடர்பு கோபுரம் மற்றும் தென் ஆசியாவில் மிக உயரமான கோபுரம் From Wikipedia, the free encyclopedia

தாமரைக் கோபுரம்map
Remove ads

தாமரைக் கோபுரம் (Lotus Tower, சிங்களம்: නෙළුම් කුළුණ) என்பது இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள இதன் தரைத்தள பரப்பளவு 30,600 சதுர அடிகளாகவும்,[1] மேலும் 356 மீட்டர் உயரக் கோபுரமாகவும் அமைந்துள்ளது.[2][3] இது இலங்கையின் அடையாள குறியீடாக பிரதிபலிக்கிறது.[4] இக்கோபுரம் தற்போது (செப்டம்பர் 2019) தெற்காசியாவில் மிகவும் உயரமான சுயமாகத் தாங்கும் அமைப்பு ஆகும். அத்துடன், ஆசியாவில் 11-வது உயரமான கோபுரமும், உலகின் 19-வது உயரமான கோபுரமும் ஆகும்.[4] இக்கோபுரம் முதலில் கொழும்பின் புறநகரான பேலியகொடையில் கட்டப்படுவதாக இருந்தது, ஆனால் பின்னர் இலங்கை அரசு கொழும்பு நகரிற்கு இடத்தை மாற்றியது.[5] தாமரை-வடிவமுள்ள இக்கோபுரம், தொலைத்தொடர்பு, காணகம், மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்ததாக அமைக்கப்பட்டுள்ளது. இக்கோபுரம் கட்டி முடிப்பதற்கான $104.3 மில்லியன் செலவை சீனாவின் எக்சிம் வங்கி கடனாகக் கொடுத்துதவியது.[6] இக்கோபுரத்தை கொழும்பு நகரின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், முக்கிய நெடுஞ்சாலைகளிலும் இருந்து காணக்கூடியதாக உள்ளது.

விரைவான உண்மைகள் தாமரைக் கோபுரம் Lotus Tower, பொதுவான தகவல்கள் ...

ஏழாண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த தாமரைக் கோபுரம் 2019 செப்டம்பர் 16 ஆம் நாள் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.[7][8][9]

Remove ads

அமைவிடம்

ஆரம்பத்தில் இக்கோபுரத்தை நிருவாகத் தலைநகர் கொழும்பின் புறநகர் ஒன்றில் அமைக்கவே திட்டமிடப்பட்டது. பின்னர் திட்டம் மாற்றப்பட்டு கொழும்பு நகர மத்தியில் பெய்ரா ஏரியை நோக்கிய பகுதியில் டி. ஆர். விஜயவர்தனா மாவத்தை வழியே தாமரைக் கோபுரம் அமைக்கப்பட்டது.[10]

கட்டுமானப் பணி

2012 சனவரி 3 ஆம் நாள் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் கையெழுத்திடப்பட்டது.[11] 2012 சனவரி 20 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.[10] 2014 திசம்பரில், கோபுரம் 125 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. 2015 சூலையில் 255 மீட்டர் உயரத்தை எட்டியது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads