திருச்செந்தூர்
தமிழ்நாட்டிலுள்ள ஒரு கடற்கரை நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருச்செந்தூர் (ஆங்கிலம்:Thiruchendur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்நகராட்சியில் திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளன.
திருச்செந்தூர் நகராட்சி, மாவட்ட தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ. தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருச்செந்தூர் தொடருந்து நிலையம் 0.5 கி.மீ. தொலைவில் உள்ளது. மதுரை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 8,271 வீடுகள் கொண்ட இந்த நகராட்சியின் மக்கள்தொகை 32,171 ஆகும்.[4][5]
10.5 ச.கி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
Remove ads
2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்
16 அக்டோபர் 2021 அன்று திருச்செந்தூர் பேரூராட்சியை நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[7][8]

புவியியல் அமைப்பு
திருச்செந்தூரின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், வடக்கே காயல்பட்டினமும், தெற்கே ஆலந்தலையும், மேற்கே மேலத்திருச்செந்தூரும் அமைந்துள்ளது.
சுப்பிரமணியசுவாமி கோயில்

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது. இது மட்டுமின்றி ஆவணித்திருவிழா மற்றும் மாசித்திருவிழா ஆகியவை இங்கு புகழ்பெற்றவை ஆகும். நாழிக்கிணறு என்ற தீர்த்தம் இங்கு உள்ளது. கடலுக்கு மிக அருகில் உள்ள இந்த நீரூற்றில் தண்ணீர் சுவையாக இருக்கின்றது.[9]
வனத்திருப்பதி
வனத்திருப்பதி கச்சனாவிளை இரயில் நிலையம் அருகில் புன்னை நகரில் அமைந்துள்ள ஒரு அழகான பெருமாள் கோவில். திருச்செந்தூரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads