கருப்புத் தாமரைக்கோழி

பறவை இனம் From Wikipedia, the free encyclopedia

கருப்புத் தாமரைக்கோழி
Remove ads

கருப்புத் தாமரைக்கோழி (Metopidius indicus, Bronze-winged jacana, தாமிர இறக்கை இலைக்கோழி) என்பது இலைக்கோழி இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இப்பறவை இந்தியா, தென்கிழக்காசியா, தெற்கு சீனா, தெற்கு சுமத்ரா, மேற்கு ஜாவா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்படவில்லை[2].

விரைவான உண்மைகள் கருப்புத் தாமரைக்கோழி, காப்பு நிலை ...
Thumb
இந்தியா, மேற்கு வங்கத்தின், கல்கத்தாவில் ஒரு பறவை .
Remove ads

தோற்றம்

பொதுவாகப் பார்த்தால் இது நீலத் தாழைக்கோழி போல காணப்படுகிறது. கௌதாரியின் அளவு உள்ளது. இதன் தலை, கழுத்து, மார்பு ஆகியன மினுமினுக்கும் கறுப்பு நிறமுடையதாகவும், இறகுகளும், முதுகும் தாமிர நிறத்தில் இருக்கும்.

கள இயல்புகள்

இலைக்கோழிகளுக்கு உரிய தாமரையிலையின் மீது நடக்கும் இயல்பு இதற்கும் உண்டு.

பரவலும் வாழிடமும்

தாமிர இறக்கை இலைக்கோழியினம் இந்தியத் துணைக்கண்டம் (இலங்கை அல்லது மேற்கு பாக்கித்தான் தவிர) மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் முக்கியமாக குறைந்த உயரத்தில் பரவலாக காணப்படுகிறது. இந்த சிற்றினம் மற்றும் நீளவால் தாழைக்கோழி சிற்றினம் ஆகிய இரண்டும் ஒரே வாழ்விடத்தில் காணப்படலாம். இது வறட்சி மற்றும் மழைய போன்ற பருவகால பரவலைத் தவிர, பிற நேரங்களில் ஒரே இடத்தில் வாழக்கூடியன.[3] இவை ஈரநிலம் மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட களைகளால் மூடப்பட்ட ஈரநிலங்களைப் பயன்படுத்த வல்லன. இனப்பெருக்கம் செய்யும் போது ஐபோமியா அக்குவாட்டிகா இலை அட்டைகளைப் பயன்படுத்துகின்றன.[4]

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads