தாராசிவா குகைகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாராசிவா குகைகள் (Dharashiv caves) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் உஸ்மனாபாத் மாவட்டத்தின் தலைமையிடமான உஸ்மானாபாத் நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள பாலாகாட் மலையில் உள்ள ஏழு குகைகளின் தொகுப்பாகும்.[2][3][4] தாராசிவா குகைகள் மகாராட்டிர மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5] இது கிபி ஐந்தாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இக்குகைகள் சமண சமயத்திற்காகானது.

Remove ads
வரலாறு
தாரசிவா குகைக் குடைவரைகள் கிபி 5 - 7-ஆம் நூற்றாண்டுகளில் நிறுவப்பட்டதாக கருதப்படுகிறது. இக்குகைகளின் குடைவரைகள் முதலில் இராஷ்டிரகூடர்களால் கிபி 10ம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது.[2] இக்குகை குடைவரைகள் முதலில் பௌத்தர்களால் நிறுவப்பட்டு பின்னர் சில குகைகள் சமணர்களின் நினைவுச் சின்னங்களாக மாற்றம் செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.[6]
குகைகள்
ஏழு தாராசிவா குகைகளில், குகை எண் ஒன்றின் குடைவரை 20 கற்தூண்களைக் கொண்டது. குகை எண் 2, எல்லோரா, அஜந்தா குகைகள் போன்று வாகாடக மன்னர்களால் வடிக்கப்பட்டது. 80 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட இதன் மைய மண்டபத்தில் பிக்குகள் தங்குவதற்கான 14 அறைகளும், பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கௌதம புத்தரின் சிலையும் உள்ளது. 3வது குகை, முதல் குகை போன்றுள்ளது. பிற நான்கு குகைகள் சமணர்களுக்கானது.[2][6]
Remove ads
தற்போதைய நிலைமை
தாராசிவா குகைகளை பௌத்தர்களும், சமணர்களும் தம்முடையது எனக் கொண்டாடுகின்றனர். மகாராட்டிரா மாநிலத்தின் 1200 குகைகளை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர் ஜேம்ஸ் பர்கூசன் என்பவரி கூற்றின் படி, தாராசிவா குகைகள் முதலின் பௌத்தர்களால் நிறுவப்பட்டது என்றும், பின்னர் 12ம் நூற்றாண்டில் அதில் சில குகைகள் சமணக் குகையாக மாற்றம் செய்யப்பட்டது என்பர்.[6][7][8]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads