தாவிகள் (பட்டாம்பூச்சிக்குடும்பம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாவி என்றும் துள்ளி (skipper, skipper butterfly) என்றும் அழைக்கப்படும் பட்டாம்பூச்சி துள்ளிகள் (Hesperiidae) குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றின் துள்ளலும் விறுவிறுப்பும் நிறைந்த பறக்கும் பாங்கின் காரணமாகவே இவை அவ்வாறு அழைக்கப்படுகின்றன. இக்குணும்பத்தின்கீழ் 3500-இற்கும் மேலான சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. இவை உலகம் முழுவதும் காணப்பட்டாலும் நடுவமெரிக்கப் பகுதிகளிலும் தென் அமெரிக்காவிலுமே இவை பல்கிப்பெருகியுள்ளன.[1] தமிழ்நாட்டில் இக்குடும்பத்தின்கீழ் 43 சிற்றினங்கள் காணப்படுகின்றன.
Remove ads
புறத்தோற்றம்
இக்குடும்பத்தின் வண்ணத்துப்பூச்சிகள் பிற குடும்பங்களைப் போலன்றி நுனியில் கொக்கி போல் வளைந்த உணர்வுக்கொம்புகளைக் கொண்டிருக்கும். இறக்கைகள் நீளமாகவும் முக்கோணவடிவிலும் கறுப்பாகவும் அடர்நிறமாகவும் அமைந்திருக்கும். ஆங்காங்கே வெள்ளைப்புள்ளிகள், திட்டுகள், கோடுகள் என ஒளிபாயும் குறிகளைக் காணலாம். நெஞ்சுப்பகுதி நீளமாகவும் திடமாகவும் இருக்கும். அடிவயிற்றைக்காட்டிலும் நீளமாகவும் இருக்கலாம். உடல்முழுவதும் அடர்ந்த மெல்லிய செதில்களால் நிறைந்திருக்கும். ஆண்-பெண் பூச்சிகளிடையே தோற்றத்தில் மாறுபாடு இருக்காது. இவற்றின் உறிஞ்சான்கள் நீண்டு குழல்போன்ற மலர்களிலிருந்தும் தேனெடுக்க உதவும்.
Remove ads
வாழிடங்கள்
பசுமைக்காடுகள், இலையுதிர்காடுகள், உலர்பசுமைக்காடுகள், புல்வெளிகள் போன்ற சூழல்களில் தாவிகள் வாழ்கின்றன.
நடத்தை
இக்குடும்பத்தைச்சேர்ந்த பட்டாம்பூச்சிகள் இருவகைப்படும். முதலாம் வகையின இளைப்பாறுகையில் இறக்கைகளை நன்றாக விரித்து நிற்கும். மற்றவகை பட்டாம்பூச்சிகள் இறக்கைகளை முழுவதுமாக மடித்தோ முன் இறகுகளைமட்டும் மடித்துவிட்டு பின்னிறகுகளை முழுவதும் விரித்தோ இளைப்பாறும். சில இனங்கள் அதிகாலையிலும், சில கருக்கலிலும், எஞ்சியவை எல்லா வேளைகளிலும் பறந்துகொண்டிருக்கும்.
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads