தா. தா. இராமகிருஷ்ணன்

மலையாள எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

தா. தா. இராமகிருஷ்ணன்
Remove ads

தாத்தமங்கலம் தாமோதரன் இராமகிருஷ்ணன் (T. D. Ramakrishnan-பிறப்பு: 1961) (தா. தா. இராமகிருஷ்ணன்) என்பவர் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மலையாள எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். ஆல்ஃபா, பிரான்சிஸ் இட்டிகோரா, சுகந்தி எந்ந ஆண்டாள் தேவநாயகி, பச்ச மஞ்ஞ சுவப்பு, சிராஜுன்னிசா ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் கேரள மாநில சாகித்திய அகாதமியின் விருதினையும், வயலார் விருதினையும் பெற்றவர்.

விரைவான உண்மைகள் தா. தா. இராமகிருஷ்ணன், இயற்பெயர் ...
Remove ads

இளம்பருவம்

இவர் திருச்சூரை அடுத்த எய்யால் என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பெற்றோர் தாமோதரன் இளையாத்து, ஸ்ரீதேவி அந்தர்ஜனம் ஆகியோர்.[1] இவர் குன்னங்குளம் மேல்நிலைப்பள்ளியிலும் எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.[1] பின்னர், ஆலுவாயில் உள்ள யூனியன் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[2] பின்னர், 1981ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயில் சேர்ந்து, சேலத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றினார்.[3] கோழிக்கோட்டிலும், பின்னர் சென்னையிலும், அதன் பின்னர் பாலக்காட்டிலும் பணியாற்றினார்.[3] 1995 ஆண்டு முதல், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் உயரதிகாரி ஆனார். பின்னர், தென்னக இரயில்வேயின் உயரதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.[3] ஆனந்தவல்லியை மணந்து, விஷ்ணு, சூர்யா ஆகிய இரு மக்களைப் பெற்றார்[1]

Remove ads

இலக்கியப் பயணம்

இவர் ஆல்பா என்ற நாவலை முதலில் எழுதினார். இக்கதை ஆல்பா எனப்படும் கற்பனைத் தீவில் நடந்ததாக விவரிக்கப்படும். இலங்கையை ஒட்டியதாகக் கூறப்படும் இக்கற்பனைத் தீவில் மனித மூளையைப் பற்றிய ஆராய்ச்சியே கதையின் கரு.[4] இவர் இயற்றிய பிரான்சிஸ் இட்டிக்கோரா என்ற கதை உலகப் புகழ் பெற்ற பல வரலாற்று மாந்தர்களை உள்ளடக்கியது. கேரளத்தில் இருந்து உலகத்தை அறியப் புறப்படும் வணிகரை மையப்படுத்தியது இக்கதை. இவர் எழுதிய 'சுகந்தி எந்ந ஆண்டாள் தேவநாயகி' என்ற புதினம், இலங்கையின் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மனித உரிமை ஆர்வலரான ரஜினி திரனகமா என்பவரைப் பற்றியது.[5] அதைப்போன்று சிராஜுன்னிசா என்னும் சிறுகதைத் தொகுதியையும் எழுதி இருக்கிறார். இறுதியில் வெளியான நாவல்கள் பச்ச மஞ்ஞ சுவப்பு, மாமா ஆப்பிரிக்கா மற்றும் அந்தர் பதிரர் மூகர் என்பன ஆகும்.

இவர் தமிழ் நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். 2007ஆம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான ஈ.கே. திவாகரன் போற்றி விருதைப் பெற்றார்.[1] பின்னர், நல்லி வழங்கிய திசை எட்டும்' இலக்கிய விருதினைப் பெற்றார்.

Remove ads

ஆக்கங்கல்

  • ஆல்பா (புதினம்)
  • பிரான்சிஸ் இட்டிக்கோரா (புதினம்)
  • சுகந்தி எந்ந ஆண்டாள் தேவ நாயகி (புதினம்)
  • ம்..ம்.. சோபாசக்தி தமிழில் எழுதிய 'ம்..ம்..' என்ற புதினத்தின் மொழிபெயர்ப்பு)
  • தப்பு தாளங்கள் (சாரு நிவேதிதா தமிழில் எழுதிய தப்பு தாளங்கள் என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
  • மாமா ஆப்பிரிக்கா (புதினம்)
  • பச்ச மஞ்ஞ சுவப்பு
  • அந்தர் பதிரர் மூகர்
  • சிராஜுன்னிசா (சிறுகதைத் தொகுப்பு)

விருதுகள்

  • 2016: சிறந்த புதினத்துக்கான கேரள அரசின் விருது – சுகந்தி எந்ந ஆண்டாள் தேவநாயகி என்ற புதினத்துக்காக[6]
  • 2016: மலையாற்றூர் விருது - சுகந்தி எந்ந ஆண்டாள் தேவநாயகி என்ற புதினத்துக்காக [7]
  • 2017: வயலார் விருது – சுகந்தி எந்ந ஆண்டாள் தேவநாயகி என்ற புதினத்துக்காக[8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads