திஜிமோன் கவுன்சோ

பெனின்-அமெரிக்க நடிகர் From Wikipedia, the free encyclopedia

திஜிமோன் கவுன்சோ
Remove ads

திஜிமோன் காஸ்டன் கவுன்சோ[1] (ஆங்கிலம்: Djimon Gaston Hounsou) (பிறப்பு: 24 ஏப்ரல் 1964)[2] என்பவர் பெனின்-அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் தனது திரைப்பயணத்தை இசை காணொளி மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து வித்தவுட் யு ஐ ஆம் நொதிங் (1990), அமிஸ்டாட் (1997), கிளாடியேட்டர் (2000), இன் அமெரிக்கா (2002), பிளட் டைமன்ட் (2006), பியூரியஸ் 7 (2015)[3] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் திஜிமோன் கவுன்சோ, பிறப்பு ...

இவர் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014)[4][5] மற்றும் கேப்டன் மார்வெல் (2019) போன்ற திரைப்படங்களிலும் சமுத்திரப்புத்திரன் (2018) மற்றும் ஷசாம்! (2019) போன்ற டிசி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[6][7]

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

கவுன்சோ 24 ஏப்ரல் 1964 ஆம் ஆண்டு பெனின் கொட்டொனௌவில் ஆல்பர்டைன் மற்றும் பியர் கவுன்சோ என்ற சமையல்காரருக்கு மகனாக பிறந்தார்.[8] அவர் தனது பன்னிரெண்டாவது வயதில் பிரான்சில் லியோனுக்கு குடிபெயர்ந்தார்.[9] 1987 ஆம் ஆண்டில் கவுன்சோ ஒரு வடிவழகராக பாரிஸில் ஒரு தொழிலை நிறுவினார். அதை தொடர்ந்து 1990 இல் அமெரிக்கா சென்றார்.[10]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads