திமாசா மக்கள் (Dimasa people), இந்தியாவின் அசாம் மற்றும் நாகலாந்து மாநிலங்களில் வாழும் பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் திபெத்திய-பர்மிய மொழக் குடும்பத்தைச் சேர்ந்த திமாசா மொழியை பேசுகின்றனர். 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இம்மக்கள் தொகை 2,62,413 ஆகும். இம்மக்கள் இந்து சமயத்தை மட்டும் பின்பற்றுகின்றனர்.
காமரூப பேரரசு கிபி 1140-இல் வீழ்ச்சி அடைந்த போது, திமாசா மக்கள் 13-ஆம் நூற்றாண்டில் திமாசா இராச்சியத்தை நிறுவினர். இந்த இராச்சியம் 1832ல் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது.
அசாம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள திமா ஹசாவ் மாவட்டம், கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், நகாமோ மாவட்டம், ஹொஜாய் மாவட்டம், கசார் மாவட்டம் மற்றும் நாகாலாந்து மாநிலத்தின் திமாப்பூர் மாவட்டத்தில் அதிகம் வாழம் திமாசா மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை ஆகும்.
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.