தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம்map
Remove ads

தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம்[1] (Martyr Captain Tushar Mahajan Udhampur railway station) (முன்னர் உதம்பூர் தொடருந்து நிலையம்), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள உதம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.[2]கடல் மட்டத்திலிருந்து 660.054 மீட்டர்கள் (2,165.53 அடி) உயரத்தில் அமைந்த இந்த இரயில் நிலையம் வடக்கு மண்டலத்தின் ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் 2005ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது.

விரைவான உண்மைகள் தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம், பொது தகவல்கள் ...

கேப்டன் துஷார் மகாஜன் நினைவாக, செப்டம்பர் 2023ஆம் ஆண்டில் உதம்பூர் தொடருந்து நிலையத்தின் பெயரை தியாகி கேப்டன் துஷார் மகாஜன் உதம்பூர் தொடருந்து நிலையம் எனப்பெயர் மாற்றப்பட்டது.[3][4]

Remove ads

தொடருந்துகள்

தியாகி கேப்டன் துஷார் மகாஜன் உதம்பூர் தொடருந்து நிலையத்தில் நின்று செல்லும் தொடருந்துகளில் சில:

  • உதம்பூர்-பவநகர் விரைவு வண்டி
  • உதம்பூர்- பிரயாக்ராஜ் அதிவிரைவு வண்டி
  • உதம்பூர்-கோட்டா வாராந்திர விரைவு வண்டி
  • தில்லி சராய் ரோகில்லா-உதம்பூர் அதிவிரைவு குளிர்சாதன வண்டி
  • உதம்பூர்-ஜம்மு தாவி பயணியர் வண்டி
  • உதம்பூர்- ஜம்மு தாவி DEMU வண்டி
  • உதம்பூர் - பதான்கோட் DEMU வண்டி
  • கட்ரா- புது தில்லி (வந்தே பாரத் விரைவுவண்டி)
  • தில்லி சப்தர்ஜங்- உதம்பூர் விரைவு வண்டி
  • ரிஷிகேஷ் - கட்ரா ஹேம்குண்ட் விரைவு வண்டி
  • ஜம்மு தாவி-துர்க் அதிவிரைவு வண்டி
Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads