ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்மு-ஸ்ரீநகர்-பாரமுல்லா இருப்புப் பாதை (Jammu–Srinagar–Baramulla railway line)[1] இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா - ஸ்ரீநகர் பகுதிகளை, ஜம்முவுடன் இணைக்கும் 356 கி.மீ. நீளம் கொண்ட இருப்புப் பாதை, ரூபாய் 10,000 கோடி மதிப்பில் அமைக்கும் திட்டம் 2002-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.[2][3] இந்த இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் முழுவதும் முடிவடைந்த பிறகு புதுதில்லியிலிருந்து - ஸ்ரீநகரை 14 மணி நேர பயண நேரத்தில் அடையலாம்.


தற்போது ஜம்மு-வைஷ்ணதேவி கோயில்-உதம்பூரை இணைக்கும் இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[4] கற்றா நகரத்திலிருந்து, பனிஹால் வரையிலான 67 கி.மீ. நீளத்திற்கு இருப்புப் பாதைகள் அமைக்கும் பணிகள் 2019-இல் முடிவடைந்துள்ளது.[5] 6 சூன் 2025இல் செனாப் பாலம் திறப்பு விழா நடத்தப்பட்டப் பின்னர் இவ்வழித்தடத்தில் வைஷ்ணதேவி கோயில் முதல் சிறீநகர் வரை இரண்டு வந்தே பாரத் விரைவுவண்டிகள் இயக்கப்படுகிறது.[6] இந்த இருப்புப் பாதைத் திட்டம் குப்வாரா வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[7] மேலும் ஜம்முவின் இராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால்-காசிகுண்ட்-அனந்தநாக்-ஸ்ரீநகர், பட்காம் மற்றும் பாரமுல்லா நகரங்களை இணைக்கும் இருப்புப் பாதை பணிகள் முடிவடைந்து தொடருந்துகள் இயக்கப்படுகிறது.[8][9] மேலும் இந்த இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் குப்வாரா வரை நீட்டிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[7]

இருப்புப் பாதையின் தொலைவை குறைக்க வேண்டி, இமயமலையின் பிர் பாஞ்சல் மலைத்தொடரில் பல இடங்களில் மலையைக் குடைந்து சுரங்கங்கள் அமைக்கப்படுகிறது. அவைகளில் ஒன்று 12 கி.மீ. நீளம் கொண்ட பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை ஆகும்.
Remove ads
தொடருந்து சுரங்கப்பாதைகளும், மேம்பாலங்களும்
இருப்புப் பாதை அமைக்க 100 கி.மீ. நீளத்திற்கு, 27 மேம்பாலங்கள், 37 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது. அவைகளில் நீளமான சுரங்கப் பாதை 11,215 மீட்டர் நீளம் கொண்ட பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை ஆகும்.[3] .[10] மேலும் செனாப் ஆற்றின் மீது 1,178 அடி உயரத்தில், 2156 அடி அகலத்தில், உலகத்தின் மிக உயரமான செனாப் இருப்புப் பாதை மேம்பாலம் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது.[11][12]
ஜம்மு-ஸ்ரீநகர்-பாரமுல்லா இருப்புப் பாதையில் 30 தொடருந்து நிலையங்கள் அமைக்கப்படுகிறது. இவ்வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 10-12 தொடருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஜம்மு - பாரமுல்லா இருப்புப் பாதை முழுமையாக அமைக்கும் திட்டம் 2021-இல் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.[13]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads