திரியாங்
மலேசியா, பகாங் மாநிலத்தில், பெரா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திரியாங் (மலாய்: Teriang; ஆங்கிலம்: Teriang; சீனம்: 直凉) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில், பெரா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் ஒரு நகரம். பகாங் ஆற்றின் துணை ஆறான திரியாங் ஆற்றின் பெயரில் இருந்து இந்த இடத்திற்குத் திரியாங் என பெயர் வந்தது.[1]
Remove ads
வரலாறு
திரியாங் வரலாறு 1800-ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் தொடங்குகிறது. அப்போது மலாய்க்காரர்கள் அதிகமான மக்கள் தொகை கொண்டவர்களாக இருந்தார்கள். விவசாயம், மீன்பிடித்தல் அவர்களின் வாழ்வாதாரம்.
அதன் பின்னர் 1900-ஆம் ஆண்டுகளில் சீனர்கள் குடியேறினார்கள். ஆரம்பத்தில் பெரும்பாலானவர்கள் திரியாங் நதி வழியாகவோ அல்லது கால்நடையாகவோ வந்து இருக்கலாம். இவர்களுக்குப் பின்னர் 1920-ஆம் ஆண்டுகளில் அங்கு ரப்பர் தோட்டங்கள் திறக்கப்பட்டன. அங்கு வேலை செய்வதற்காக தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள்.
மலாயா தொடருந்து நிறுவனம்
1900-களின் தொடக்கத்தில் மலாயா தொடருந்து நிறுவனம் இங்கு ஒரு சிறிய ரயில் நிலையத்தைக் கட்டியது. சிங்கப்பூரில் இருந்து வந்த இரயில்கள் இங்கு நின்று சென்றன.
திரியாங்கில் வந்து குடியேறிய சீனர்கள் பெரும்பாலும் ரப்பர் மரம் சீவுபவர்கள்; மர வியாபாரிகள்; உணவகம் மற்றும் காபி கடையாளர்கள். திரியாங்கில் இரயில்கள் நிறுத்தப்படும் போது சிலர் பயணிகளுக்கு உணவைத் தயாரித்துக் கொடுத்தனர்.
மலாயா அவசரக்காலம்
1950-க்குள் பல ஆயிரம் மக்கள் தொகையுடன், திரியாங் ஒரு பிரதானமான சீன நகரமாக வளர்ந்தது. 1948 - 1960 மலாயா அவசரக்காலத்தில், மலாயா பிரித்தானிய இராணுவம் பல கிராமப்புற சீனர்களைப் பலவந்தமாகப் புதிய கிராமங்களில் குடியேறச் செய்தது.
2020-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெரா மாவட்டத்தின் மக்கள் தொகை 5,322 ஆகும். இவர்களில் 45% பேர் சீன இனத்தவர்கள். பெரும்பாலானவர்கள் திரியாங் நகரம் அல்லது புதிய கிராமங்களில் வசிக்கும் நகரவாசிகள்.[2]
திரியாங் தமிழர்கள்
தமிழர்களும் கணிசமான் அளவிற்கு தோட்டப் புறங்களில் வாழ்கிறார்கள். திரியாங் பகுதியில் பல ரப்பர் தோட்டங்கள் உள்ளன. ரப்பர் தோட்டங்களாக இருந்தவை இப்போது எண்ணெய்ப்பனைத் தோட்டங்களாக மாறி விட்டன.
மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி
திரியாங் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளியில் 24 மாணவர்கள் பயில்கிறார்கள். 11 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads