திருக்கைலாய ஞானஉலா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருக்கைலாய ஞானஉலா பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான உலா வகையினது.
நூலின் காலம் 650-710. சேரமான் பெருமாள் நாயனார் பாடிய இந்த உலா நூல் ஆதியுலா எனப் போற்றப்படுகிறது. (காரணம் உலா இலக்கியத்தில் இது முதல்நூல்). ”ஆதி” எனப்படும் கைலாய நாதன் உலாவருவதைப் பாடுவதாலும் இது ஆதியுலா எனப்பட்டது.
இதில் 197 கண்ணிகள் உள்ளன. இறுதியில் ஒரு வெண்பாவும் உள்ளது. இந்த வெண்பா சங்ககாலத் தொகுப்புநூல் பத்துப்பாட்டு ஒவ்வொன்றின் இறுதியிலும் சேர்க்கப்பட்டுள்ள வெண்பா போன்றது. சிவன் உலா வரும்போது ஏழு பருவத்துப் பெண்களும் அவன்மீது காதல் கொள்கின்றனர்.
- இந்த நூலிலிருந்து சில கண்ணிகள்
- நன்றறி வார்சொல் நலம்தோற்று நாண்தோற்று
- நின்றறிவு தோற்று நிறைதோற்று – நன்றாகக்
- கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
- நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் – பெதும்பை பருவத்துப் பெண் (கண்ணி 98, 99)
பொருள்: நலம் தோற்று, நாண் தோற்று, அறிவு தோற்று, நிறை தோற்று, கைவண்டு (வளையல்) ஓட, கண்வண்டு (விழி) ஓட, கலை (உணிந்துள்ள ஆடை) ஓட, நின்று உள்ளம் ஒழிந்து ஒப்புக்கு நின்றுகொண்டிருந்தாள்.
Remove ads
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads