திருச்சி சிவா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

திருச்சி ந. சிவா [1] (Tiruchi N. Siva) (பிறப்பு: 6 சூன், 1954) இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளரும் ஆவார்.

விரைவான உண்மைகள் திருச்சி என். சிவா, நாடாளுமன்ற உறுப்பினர் ...

ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், பலமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார்.

இலங்கைவாழ்த் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் அதிகமாகக் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.[சான்று தேவை] நூல்கள் பலவற்றையும் திமுக கட்சி‌ இதழான முரசொலியில் பல சமுதாய, விழிப்புணர்வு, அரசியல் தொடர் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்[1]. இவர் எழுதிய நூல்களில் தலைநகரில் தமிழன் குரல் என்ற நூல் புகழ்பெற்ற நூலாகும். மேலும், குற்றவாளிக் கூண்டில் சாக்ரடீஸ் என்ற நூலையும் எழுதியுள்ளார். மாணவப் பருவத்திலேயே திமுக மாணவரணியில் சேர்ந்து கட்சிப் பணியாற்றியவர். 1976 நெருக்கடி நிலையின் போது மிசாக் கைதியாகச் சிறை சென்றவர்[1].

Remove ads

தனிநபர் மசோதா

திருச்சி சிவா கொண்டு வந்த திருநங்கைகளுக்குச் சம உரிமை வழங்கும் தனிநபர் சட்டமுன்வரைவு 2015-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.[2][3] இதற்கு முன்பு, 1970-ஆம் ஆண்டு, குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை அதிகார வரம்பை விரிவுபடுத்துதல் தொடர்பான தனிநபர் சட்டமுன்வரைவு சட்டமாக நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு, 45 ஆண்டுகள் கழித்து திருச்சி சிவா கொண்டு வந்த தனிநபர் சட்டமுன்வரைவு சட்டமாக நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads